Skip to main content

”நான் என்ன எம்.ஜி.ஆரா, அம்மாவா, அஜித்தா இல்லை விஜய்யா?” - தினகரன் கோபம்

Published on 18/04/2019 | Edited on 18/04/2019

தமிழ்நாடு முழுவதும் (வேலூர் நீங்கலாக) இன்று நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இதில் மக்கள் வெளியூர்களில் இருந்து தங்கள் சொந்த ஊருக்குச் சென்று ஆர்வமுடனும் நம்பிக்கையுடனும் வாக்களித்து வருகின்றனர். அரசியல் தலைவர்களும் பிரபலங்களும் நடிகர்களும் தங்கள் பகுதி வாக்குச் சாவடிகளில் வாக்களித்து வருகின்றனர். அம்மா மக்கள் முன்னேற்றக்  கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன், சென்னை அடையாறில் தனது வாக்கை செலுத்திவிட்டு செய்தியாளர்களிடம் பேசினார்.

 

ttv dhinakaran



அப்போது அவர், "ஆளும் அதிமுக 40% ஓட்டு வச்சிருக்கோம், ஜெயிக்கபோறோம்னு சொல்றாங்க. அப்புறம் எதுக்கு 18 தொகுதி இடைத்தேர்தலுக்கு ஒரு ஓட்டுக்கு 2000 ரூபாய் கொடுக்குறாங்க? நாடாளுமன்ற தேர்தல்ல ஒரு ஓட்டுக்கு 500, 1000னு கொடுக்குறாங்க? அவுங்க ஜெயிக்கமாட்டாங்கன்னு தெரியுது.

தமிழ்நாட்டுல பீஜேபிக்கு யாராவது ஓட்டு போடுவாங்களா? எடுபுடி பழனிச்சாமி, அம்மா தமிழகத்தில் அனுமதிக்காத பல திட்டங்களை உள்ளே விடுறார். இந்தப் பக்கம் காங்கிரஸ்ல நீட்டை விலக்குவோம்னு சொன்னவங்க, தமிழகத்தின் ஜீவாதார பிரச்சனையான காவிரி குறித்து எதுவும் சொல்லலையே? ஏற்கனவே தமிழகத்தை பல விதங்களிலும் கைவிட்டது காங்கிரஸ். அது மாதிரி வேலைவாய்ப்பு தருவேன்னு சொல்லி ஏமாத்துன மோடி மேல கோபமா இருக்காங்க இளைஞர்கள்.

அதுனாலதான் போற இடத்திலெல்லாம் அவ்வளவு பெரிய எழுச்சி. நான் என்ன மக்கள்திலகம் எம்.ஜி.ஆரா, புரட்சித் தலைவி அம்மாவா, நடிகர் அஜித்தா இல்லை விஜய்யா? எதுனால இவ்வளவு கூட்டம்னா மக்கள் மாற்றத்தை விரும்புறாங்க. அதை அ.ம.மு.க தரும்னு நம்புறாங்க. இதை யார் மறைக்க நினைத்தாலும் தமிழகத்தின் உரிமைகளை நாங்க மீட்டெடுப்போம்னு மக்கள் நம்பி ஆதரவு தர்றாங்க" என்று சற்று காரமாகவே பேசினார்.       

 

 

    

சார்ந்த செய்திகள்