Published on 25/03/2019 | Edited on 25/03/2019
தமிழகம் மற்றும் புதுச்சேரி நாடாளுமன்ற பொதுத்தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் அடுத்த பட்டியலை வெளியிட்டிருக்கிறது அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்.

புதுச்சேரி நாடாளுமன்றத் தொகுதிக்கு, அக்கட்சியின் மாநில கழக இளைஞரணி செயலாளரான என்.தமிழ்மாறனையும், இடைத்தேர்தல் நடைபெறும் ஓசூர் சட்டமன்றத்துக்கு கர்நாடக மாநில கழக செயலாளர் வி.புகழேந்தியையும் அறிவித்துள்ளது அக்கட்சி.

மேலும், திருநெல்வேலி நாடாளுமன்றத்துக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த ஞான அருள்மணிக்குப் பதிலாக, கழக புரட்சித்தலைவி அம்மா பேரவை இணைச்செயலாளர் மைக்கேல் ராயப்பனை வேட்பாளராக அறிவித்திருக்கிறார் அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்.