Published on 04/02/2020 | Edited on 04/02/2020
தேர்தல் வியூக ஆலோசகர் பிரசாந் கிஷோரின் ஐ-பேக் நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றுவது பற்றி அதிகாரப்பூர்வமாக திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். தமிழக இளைஞர்களை ஐ-பேக் நிறுவனத்தின் வழியே எங்களுடன் பணிபுரிய உள்ளனர் என்றும் திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்தார்.மேலும் 2021 பேரவை தேர்தலுக்கான திமுகவின் திட்டங்களை செழுமைப்படுத்த ஐ-பேக் நிறுவனத்துடன் திமுக கைகோர்த்துள்ளது. இதை அதிகாரப்பூர்வமாக தனது ட்விட்டர் பக்கத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் கூறியிருந்தார்.
திமுகவின் அறிவிக்கப்படாத செயல் தலைவராக பிரசாந்த் கிஷோரை நியமித்துள்ளார் ஸ்டாலின். இனி ஒரு வட நாட்டு ஆரியர்தான் திமுகவை வழிநடத்த உளார்.... மாற்றான் தோட்டத்து மல்லிகைகளே எங்கே போனது உங்கள் சுயமரியாதை? ஐயா வீரமணி பதில் சொல்வாரா
— Balu Kaliyaperumal (@PMKAdvocateBalu) February 3, 2020
இது தொடர்பாக பா.ம.க. செய்தி தொடர்பாளர் வக்கீல் பாலு தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், திமுகவின் அறிவிக்கப்படாத செயல் தலைவராக பிரசாந்த் கிஷோரை நியமித்துள்ளார் ஸ்டாலின். இனி ஒரு வட நாட்டு ஆரியர்தான் திமுகவை வழிநடத்த உளார்.... மாற்றான் தோட்டத்து மல்லிகைகளே எங்கே போனது உங்கள் சுயமரியாதை? ஐயா வீரமணி பதில் சொல்வாரா என்று கூறியுள்ளார். பாமக கட்சியின் பாலு தெரிவித்த கருத்துக்கு திமுகவினர் சமூக வலைத்தளங்களில் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.