Skip to main content

ஸ்டாலினுடைய பண்பை எப்படி நேசித்தேன்... தங்க தமிழ்செல்வன் பேச்சு 

Published on 22/07/2019 | Edited on 22/07/2019

 

சென்னையில் கடந்த மாதம் தங்க தமிழ்செல்வன் தி.மு.க.வில் இணைந்தார். அதனைத் தொடர்ந்து தேனி அருகே உள்ள வீரபாண்டியில் மாற்றுக்கட்சிகளை சேர்ந்தவர்கள் தி.மு.க. வில் இணையும் விழா மற்றும் தி.மு.க. பொதுக்கூட்டம் நேற்று மாலை நடந்தது.

 

Thanga Tamil Selvan - mkstalin


இதில் தங்க தமிழ்செல்வன் பேசுகையில், 
 

அம்மா படத்தை வைத்துக்கொண்டு அதிமுக அமைச்சர்கள் எப்படி நடிக்கிறார்கள் தெரியுமா? அம்மா ஜெயில்ல இருக்கும்போது பதவிப் பிரமாணம் எடுத்தார்கள் அமைச்சர்கள். அழுவுறார்கள். கண்ணை துடைக்கிறார்கள். ஏனென்றால் ஜெயில்ல இருந்து வீடியோ பார்ப்பார்கள் என்பதற்காக இப்படி அழுதார்கள். அம்மா இறந்த பிறகு பதவிப் பிரமாணம் எடுத்தார்கள் ஒருத்தர் கூட அழவில்லை. நடிப்பு. நடிச்சே அந்த அம்மாவ கொன்னாங்க. நடிச்சே இன்னொரு அம்மாவ ஜெயிலுக்கு அனுப்புனாங்க. இந்த துரோகக் கூட்டத்தை தமிழ்நாட்டில் இருந்து விரட்ட வேண்டும் என்று சொன்னால், ஸ்டாலின் முதல் அமைச்சராக வேண்டும். அவர் முதல் அமைச்சராக வந்த பின்னர்தான் தமிழ்நாடு சிறப்பு பெறும்.


 

ஸ்டாலினுடைய பண்பை எப்படி நேசித்தேன் என்று சொன்னால், அண்ணா அறிவாலயத்தில் நான் திமுகவில் சேருவதற்கு முதல் நாள், ஸ்டாலினை அவரது வீட்டில் போய் பார்க்கிறேன். எதிர்க்கட்சி தலைவரான அவரது வீட்டில் போலீஸ் பாதுகாப்பு இருக்கிறது. அவரை நான் சந்தித்ததை வெட்ட வெளிச்சமாக காட்டியிருக்கலாம். பெரிய மனுஷன் ஸ்டாலின். சந்திப்பு முடிந்து மறுநாள் அண்ணா அறிவாலயத்தில் என்னை கட்சியில் இணைத்துக்கொண்டார். 


 

அப்போது, சிறப்பா செயல்படுங்க. தேனி மாவட்ட நிர்வாகிகளோடு இணைந்து செயல்பட்டு கட்சியை சிறப்பாக கொண்டுவாருங்கள் என்றார். நான் இப்போது ஸ்டாலினிடம் சொல்லிக்கொள்வது, நடக்க இருக்கிற சட்டமன்ற பொதுத்தேர்தலில் தேனி மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளிலும் திமுகதான் வெற்றி பெறும். உள்ளாட்சித் தேர்தலிலும் திமுகதான் 100 சதவீதம் வெற்றியை பெறும். இவ்வாறு பேசினார். 

 

சார்ந்த செய்திகள்