திண்டுக்கல் அருகே சுவரில் விளம்பரம் செய்வது தொடர்பாக பா.ஜ.க, தி.மு.க இடையே ஏற்பட்ட மோதலால் போலீசார் குவிக்கப்பட்டனர்.
திண்டுக்கல் மாநகரில் உள்ள ஆர்.வி. நகர் கூட்டுறவு பண்டகசாலை சுவரில் பா.ஜ.கவினர் சுவர் விளம்பரம் செய்திருந்தனர் அதன் மீது நேற்று தி.மு.கவினர் பேனர் ஒட்டினர் அதை பார்த்த பா.ஜ.க நிர்வாகி தமிழ்வாணன், பிளக்ஸ் பேனரை கிழிக்க முயன்றார் இதனால் தி.மு.கவினருக்கும் அவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு அது கைகலப்பு வரை போனது.
இதனால் திடீரென பா.ஜ.க நிர்வாகி தமிழ்வாணன் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது உடனே அவரை திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனையில் சேர்த்தனர். சிறிது நேரத்தில் இரு கட்சியினரும் சுவர் அருகே கூடியதால் போலீசார் குவிக்கப்பட்டனர். அதனை தொடர்ந்து உடனே டி.எஸ்.பி மணிமாறன் ஸ்பாட்டுக்கு வந்து பேச்சு வார்த்தை நடத்தியதையடுத்து கலைந்து சென்றனர். ரூபாய் 5 ஆயிரம் மதிப்புள்ள பேனரை கிழித்ததாக பா.ஜ.கவினர் மீது தி.மு.கவினர் தெற்கு போலீசில் புகார் அளித்தனர். இச்சம்பவம் திண்டுகல் மாநகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.