Skip to main content

"விஜய் சேதுபதிக்கு என்ன தெரியும்...?" - கொந்தளித்த தமிழிசை!

Published on 13/08/2019 | Edited on 13/08/2019

ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கிய சிறப்பு அந்தஸ்து சட்டப்பிரிவு 370, 35Aஐ மத்திய அரசு நீக்கியது. இதற்கான மசோதாவை மக்களவை மற்றும் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. இது குறித்து எதிர் காட்சிகள் மற்றும் பிரபலங்கள் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அரசியல் பார்வையாளர்கள் மத்தியில் இந்த மசோதா பெரும் விவாதத்தையும், விமர்சனத்தையும் ஏற்படுத்தியது. சமீபத்தில்  நடிகர் விஜய் சேதுபதி இது பற்றி பேசும் போது, ''காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது ஜனநாயக விரோதமான செயல். இதனை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறினார். மேலும் காஷ்மீர் விவகாரம் பற்றி பெரியார் அன்றே கருத்து கூறிவிட்டார். 
 

bjp



அதாவது அடுத்தவர் வீட்டு பிரச்னையில் மற்றொருவர் தலையிட முடியாது. தலையிட கூடாது. பக்கத்து வீட்டார் மீது அக்கறை செலுத்தலாம். ஆளுமை செலுத்தக்கூடாது என்று பெரியார் கூறியிருக்கிறார், என குறிப்பிட்டிருந்தார். விஜய் சேதுபதியின் கருத்துக்கு  பதிலடி தரும் வகையில், பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறும் போது, காஷ்மீர் பற்றி சிலர் தவறான கருத்தை பரப்பி வருகிறார்கள். சினிமாவில் நடிப்பவர்களுக்கு காஷ்மீர் பிரச்சனை பற்றி என்ன தெரியும்? காஷ்மீர் பற்றி ஒன்றுமே தெரியாத நபர்கள் எல்லாம் கருத்து கூறுகிறார்கள். பெரியார் பற்றி தேவையற்ற எடுத்துக்காட்டுகளை கூறுகிறார்கள். மேலும் அவர்கள் சினிமாவில் நடிப்பதோடு மட்டும் நிறுத்திக் கொள்ள வேண்டும். காஷ்மீர் பிரச்சனையில் இந்தியா மேற்கொண்ட நடவடிக்கைக்கு சர்வதேச நாடுகள், அரசியல் தலைவர்கள் பாராட்டு தெரிவித்து வரும் நிலையில், விவரம் தெரியாத நடிகர்கள் எதுவும் பேசாமல் அமைதியாக இருப்பதே நல்லது,'' என்று தமிழிசை குறிப்பிட்டுள்ளார்.

 

சார்ந்த செய்திகள்