மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்போவதை குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, பாஜகவைச் சேர்ந்த பொன் ராதாகிருஷ்ணன் அளித்த பேட்டியில், " தமிழின் தலைநகருக்கு இந்த உதவி செய்துள்ளதால் தமிழக மக்களே சுகாதார துறை அமைச்சர் நட்டாவுக்கும் பிரதமர் மோடிக்கும் நன்றிக்கடன் பட்டுள்ளனர். இதுகுறித்து அமைச்சர் நட்டாவுக்கு நன்றி தெரிவித்தேன்.
மேலும், இந்த திட்டம் அட்டல் பிஹாரி வாஜ்பாய் ஆட்சியில் இருந்த காலத்திலேயே யோசிக்கப்பட்ட விஷயம். அப்போது கூட்டணியில் இருந்தது திமுக. திமுகவுக்கு காலதாமதத்தை பற்றி பேச எந்த யோக்கிதையும் இல்லை. தற்போது பிரதமர் மோடியின் அரசு இதை கொண்டுவந்திருப்பதால் இந்த தமிழ் சமூகம் அவருக்கு கடமைப்பட்டிருக்கிறது. யார் யாரோ சொல்வதை எல்லாம் பேசாதீர்கள், அவர்களுக்கு இதைப்பற்றி பேச யோக்கிதையே இல்லை.
டெல்லியை போன்று பிரமாண்டமாக கட்ட இருக்கும் இந்த மருத்துவமனை அடிக்கல் நாள் விழாவை ஒட்டுமொத்த தமிழகமும் கொண்டாட வேண்டும். குறிப்பாக தென் தமிழகத்தில் ஒவ்வொரு வீட்டார்களும் இந்த நிகழ்வு நடக்கும்போது திருவிழாவாக எடுத்து கொண்டாட வேண்டும்.
முடிவில், அடிக்கல் விழாவுக்கு மோடி வருவாரா என்று கேட்கப்பட்டதற்கு. மதுரை மீனாட்சி மண், மோடி வரவேண்டும் என்றார்.