மதுரையில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, "த.மா.கா., அ.தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கின்றது. அ.தி.மு.க. கூட்டணி வெற்றி மிகப் பிரகாசமாக உள்ளது. தமிழகத்தில் அதிக அளவிலான வளர்ச்சிப் பணிகள் நடைபெற்றுள்ளது. வளர்ச்சிப் பணிகளை எதிர்க்கட்சிகளால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. இந்தியாவில் வேறு எந்த மாநிலங்களில் இல்லாத அளவிற்கு வளர்ச்சிப் பணிகள் நடைபெற்றுள்ளது. கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் அவசியம். அவசரம் மீனவர்கள் பிரச்சினைகளில் உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
விவசாயிகளின் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும். ஒரு சிலரின் தூண்டுதலால் விவசாயிகள் போராட்டம் தொடர்கிறது. விவசாயிகள் தவறான வழியில் கொண்டு செல்லப்படுகிறார்கள். பெட்ரொல், டீசல், கேஸ் விலை உயர்வை மத்திய அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். எதிர்க்கட்சிகள் ஆக்கப்பூர்வமாகச் செயல்பட வேண்டும். அ.தி.மு.க.வுடன் தேர்தல் கூட்டணி குறித்து சமூகமாகப் பேசுவோம். அ.தி.மு.க.வில் இருந்து அதிகாரப்பூர்வ அழைப்பு வரும்போது பேசுவோம். யார் வெளியே வந்தாலும், அ.தி.மு.க. கூட்டணியின் வெற்றியைத் தடுக்கமுடியாது. சந்தர்ப்பங்களுக்காக 'வேல்'-ஐ கையில் எடுப்பவர்களுக்கு வேல் கைகொடுக்காது. த.மா.கா.வினர் தொடக்கத்தில் இருந்தே வேலை கையில் எடுத்து வருகிறோம்" எனக் கூறினார்