கரோனா தொற்று நாட்டையே திணறவைக்கும் நிலையிலும், தமிழகம் உள்ளிட்ட மாநில அரசுகளுக்குத் தரவேண்டிய நிதியை தராமல் மோடி அரசு இழுத்தடித்து வருவதாகக் கூறுகின்றனர். தற்போது இருக்கும் நிலையில், உ.பி.யைத் தவிர மற்ற மாநிலங்களை மோடி அரசு கவனத்திலேயே எடுத்துக்கவில்லை என்று அரசியல் வட்டாரங்கள் கூறிவருகின்றனர். கரோனா காலத்தில் நிதி நெருக்கடியில் தமிழகம் தவித்து வருவதாகச் சொல்கின்றனர். மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளைக்கூட எங்களால் செய்யமுடியவில்லை என்று மாநில அரசுகள் புலம்பி வருகின்றனர். இப்படியே போனால் மக்களின் நம்பிக்கையை நாங்கள் இழக்க நேரிடும் என்றும் சொல்கின்றனர்.
அதனால், எங்களுக்குத் தரவேண்டிய பேரிடர் கால நிதியையாவது கொடுங்கள் என்று மாநில அரசுகள் மத்திய அரசிடம் கேட்டு வந்தும், மத்திய அரசு எந்தப் பதிலும் சொல்லாமல் இருப்பது மாநில அரசுகளுக்கு நெருக்கடியாக உள்ளது என்கின்றனர். இது பா.ஜ.க. ஆளும் மாநிலங்களையும் எரிச்சலில் ஆழ்த்தியிருக்கிறது. அதே சமயம், உங்கள் கரோனா தடுப்புப் பணிகள் பற்றிய விவரங்களை அனைத்து வாரமும் எங்களுக்கு ரிப்போர்ட் அனுப்புங்கள் என்று மாநில அரசுகளுக்கு உத்தரவு போட்டுள்ளது மத்தியில் ஆளும் பாஜக அரசு.