





கரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல் படுத்தப்பட்டுள்ளது. இருந்தபோதிலும், கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் இந்தியாவில் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த நாடுமுழுவதும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப் பட்டுள்ளது.
தமிழகத்தில் ஊரடங்கினால் ஏழைகள், தினக்கூலிகள் உள்ளிட்ட பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். உணவின்றி தவிக்கும் அவர்களுக்கு அரசு சார்பிலும், தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனத்தினர் சார்பிலும் பல்வேறு உதவிகள் செய்யப்படுகின்றன. நேற்று, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னை, சைதாப்பேட்டை பகுதியில் ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களுக்கு கரோனா விழிப்புணர்வு குறித்த அறிவுரைகளை வழங்கினார். பின்னர் ‘டிசம்பர் 3’ இயக்கத்தின் மூலமாக 500 மாற்றுத் திறனாளிகளுக்குத் தேவையான அரிசி மற்றும் மளிகைப் பொருட்களை வீட்டிற்கே சென்று வழங்கும் திட்டத்திற்காக டிசம்பர் 3 இயக்கத்தின் மாநிலத் தலைவர் தீபக்கிடம் அப்பொருள்களை ஒப்படைத்தார்.