அந்தநல்லூர் ஒன்றியத்தில் அ.தி.மு.க. ஒரு வார்டில் கூட வெற்றி பெறாதது அ.தி.மு.க. தொண்டர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த அதிர்ச்சியில் இருந்து அவர்கள் இன்னும் மீளவில்லை. ஏனென்றால் இந்த ஒன்றியம் அடங்கி உள்ள ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதியில் தான் ஜெயலலிதா கடந்த 2011-ம் ஆண்டு நடைபெற்ற பொது தேர்தலில் வெற்றி பெற்று முதல் - அமைச்சரானார். தற்போது இந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரான வளர்மதி தமிழக அமைச்சராக பதவி வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
திருச்சி மேற்கு தொகுதியில் திருச்சி கிராப்பட்டியில் பிற்படுத்தபட்டோர் விடுதி மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் ஓட்டு மிஷின் பாதுகாப்பாக வைக்கும் இடம் என இரண்டு கட்டித்திற்கு டெண்டர் தொகை 9 கோடி அவசர அவசரமாக விடப்பட்டு இதற்கான கமிஷன் 36 இலட்சம் முழுவதையும் தேர்தல் செலவுக்கு கொடுக்க வேண்டும் என அமைச்சர் வளர்மதிக்கு அறிவுறுத்தப்பட்டிருந்ததாம். தேர்தல் செலவு முழுவதையும் நானே பார்த்துக்கொள்கிறேன் என்று சொல்லிக்கொண்டிருந்த அமைச்சர் வளர்மதி, தேர்தலுக்கு நடுவே சென்னைக்கு சென்று முதல்வர் எடப்பாடியிடம் தேர்தலுக்கு பண செலவு கொடுத்துட்டேன் என்று அப்டேட் வேறு செய்திருக்கிறார்.
ஆனால் களத்தில் அதிமுக வேட்பாளர்களுக்கு தலா ரூபாய் 50,000 மட்டும் கொடுத்து விட்டு மற்ற செலவுகளுக்கு பணம் வெளியே செல்லாததால் இதை சரியாக பயன்படுத்தி திமுக அனைத்து பதவிகளிலும் வெற்றி பெற்றனர் என்று கவலையுடன் தெரிவிக்கின்றனர் ரரக்கள். அதிமுக கோட்டை என்று வர்ணிக்கப்பட்ட ஸ்ரீரங்கம் தற்போது திமுக கோட்டையாக மாறிவிட்டது.