



Published on 25/03/2019 | Edited on 25/03/2019
தென் சென்னை திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் சென்னை அடையாறில் உள்ள மாநகராட்சி 13-வது மண்டல அதிகாரி ஆல்வினிடம் வேட்புமனு அளித்தார். தமிழச்சி தங்கபாண்டியன் வேட்பு மனு தாக்கலின் போது மா.சுப்பிரமணியன், வாகை சந்திரசேகர் உடனிருந்தனர். தென்சென்னையில் அதிமுக சார்பில் தற்போதைய தென்சென்னை எம்பியும், அமைச்சர் ஜெயக்குமாரின் மகனுமான ஜெயவர்தன் போட்டியிடுகிறார். மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் தென்சென்னை தொகுதியில் ரங்கராஜன் போட்டியிடுகிறார்.