சாத்தான்குளத்தில் தந்தை மகன் உயிரிழந்த சம்பவத்தில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தன்னிச்சையாக அதனை வழக்காக எடுத்துக் கொண்டது. கோவில்பட்டி ஜுடிசியல் நீதிபதியை சாத்தான்குளம் காவல் நிலையத்தில் விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்டார்கள். நீதிபதி பாரதிதாசன் காவல் நிலையம் சென்று விசாரணை மேற்கொண்டார்.
அப்போது தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் குமார், சாத்தான்குளம் துணை கண்காணிப்பாளர் பிரதாபன் ஆகியோர் அங்கு வந்திருக்கின்றனர்.
உயர்நீதிமன்ற ஆணைப்படி, காவல் நிலைய ஆவணங்களை நீதிபதி பாரதிதாசன் கேட்டுள்ளார். அதனை தர மறுத்திருக்கிறார்கள். அப்போது காவலர் மகராஜன், நீதிபதியை ஒருமையில் பேசியதாகவும், கூடுதல் கண்காணிப்பாளர் குமார், துணை கண்காணிப்பாளர் பிரதாபன் ஆகியோர் உடல் அசைவு மொழிகளால் மிரட்டியதாகவும், இமெயில் மூலமாக உயர்நீதிமன்ற நீதிபதிகள் கவனத்திற்கு கொண்டு சென்றார்.
இதையடுத்து குமார் மற்றும் பிரதாபன் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டனர். இந்நிலையில் இன்று நீலகிரி மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளராக குமாரும், புதுகோட்டை துணை கண்காணிப்பாளராக பிரதாபனும் நியமிக்கப்பட்டுள்ளனர்.