தமிழ்நாட்டில் நடந்த சட்டமன்றத் தேர்தலை அடுத்து திமுக தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்றுக்கொண்ட நிலையில், அதிமுக தன்னை அதிகாரப்பூர்வ எதிர்க்கட்சியாக நிலைநிறுத்திக்கொண்டது.
எதிர்க்கட்சித் தலைவராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று (14.06.2021) நடந்த அதிமுக கூட்டத்தில் எதிர்க்கட்சித் துணைத் தலைவராக ஓபிஎஸ் தேர்வு செய்யப்பட்டார். அதேபோல் நேற்று நடந்த கூட்டத்தில் முக்கியமாக சசிகலாவின் நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதேபோல் சசிகலாவுடன் தொலைபேசியில் பேசிய அதிமுகவினர் 15 பேரை அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கி ஓபிஎஸ், இபிஎஸ் அறிக்கை வெளியிட்டிருந்தனர்.
இந்நிலையில் 'அதிமுகவினரை நீக்குவது கஷ்டமாக இருக்கிறது' என சசிகலா தெரிவித்துள்ளார். நெல்லையைச் சேர்ந்த பாரதி என்பவருடன் சசிகலா பேசும் 42வது ஆடியோ வெளியாகியுள்ளது. அந்த ஆடியோவில், ''அதிமுக எதிர்க்கட்சியாக இருக்கும்போதே கட்சியினரை நீக்குவது கஷ்டமாக இருக்கிறது'' என சசிகலா பேசியுள்ளார்.