Skip to main content

சசிகலா முன்கூட்டியே விடுதலையா? ஐ.பி.எஸ். அதிகாரி ரூபா பதில்

Published on 12/06/2019 | Edited on 12/06/2019

 

சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு நான்காண்டு சிறை தண்டனையும், தலா ரூபாய் 10 அபராதமும் விதித்து  2017 பிப்ரவிரி 14ல் உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. இதையடுத்து 3 பேரும் கர்நாடக மாநிலம், பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் 2017 பிப்ரவரி 15ஆம் தேதி அடைக்கப்பட்டனர். 


 

 

sasikala


 

இந்த நிலையில் நன்னடத்தை அடிப்படையில் சசிகலா விடுவிக்கப்படலாம் என்று கடந்த சில நாட்களாக செய்திகள் வெளியாகி வந்தன. இதுகுறித்து கர்நாடக மாநில மூத்த ஐஏஎஸ் அதிகாரி ரூபா, நாளிதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார்.
 

அதில், குற்றவாளிகளை நன்னடத்தையின்படி அவர்களின் தண்டனை காலம் முடிவதற்கு முன்னரே விடுதலை செய்ய விதிமுறை உள்ளது. ஆனால் சசிகலா வழக்கை பொருத்த வரை அந்த விதிமுறைகளுக்குள் வராது. எனவே தண்டனை காலத்திற்கு முன்னதாகவே அவரை விடுவிக்கும் கேள்வியே எழாது என தெரிவித்துள்ளார். 

 


 

 

 

 

சார்ந்த செய்திகள்