சசிகலாவை சந்திக்க பெங்களுரு சிறைக்கு நேற்று சென்றிருந்தார் தினகரன். ஆனால் சசிகலா அவரை சந்திக்கவில்லை. ஒரு மணி நேரம் காரிலேயே உட்கார்ந்திருந்த டிடிவி தினகரன், கடுப்பபேறிய முகத்துடன் சசிகலாவை சந்திக்காமலேயே பெங்களுருவில் இருந்து புறப்பட்டுச் சென்றார்.
ஏற்கனவே 80 சதவீத அமமுகவினர் அதிமுகவில் இணைந்துவிட்டனர். அத்துடன் சசிகலாவுக்கு பெங்களுரு சிறையில் அனைத்து வேலைகளையும் செய்து வந்த புகழேந்தியை அமமுகவில் இருந்து நீக்கியது சசிகலாவுக்கு பிடிக்கவில்லை.
தேர்தல் கமிஷனில் அமமுகவை பதிவு செய்யும் தினகரனின் முயற்சி வெற்றி பெறவில்லை. அதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டுக்கும் போக முடியாது. தேர்தல் கமிஷன் அரசியல் கட்சிகளை பதிவு செய்யும் விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் தலையிட மாட்டோம் என பல தீர்ப்புகளில் கூறியுள்ளது.
இந்த நிலையில்தான் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டால்தான் அமமுக மறுபடியும் உயிர் பெறும் என்பதற்காக சசிகலாவிடம் அனுமதி வாங்க தினகரன் சென்றார். இதுவரை ஏற்பட்ட அனைத்து பின்னடைவுகளுக்கும் தினகரனின் செயல்பாடுகள்தான் காரணம் என நினைக்கும் சசிகலா அவரை சந்திக்கவில்லை.
சசிகலாவும் அவரை நிராகரிக்க தொடங்கியதால் வெறுத்துப்போன தினகரன் கடுத்த முகத்துடன் பெங்களுருவில் இருந்து திரும்பினார்.