Skip to main content

ஆளும் கட்சியும், எதிர் கட்சியும் ஒரு பிம்பத்தை உருவாக்க பார்க்கிறார்கள்... டிடிவி தினகரன் 

Published on 04/07/2019 | Edited on 04/07/2019

 

நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் 22 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் முடிவடைந்த பின்னர் கடந்த ஜூன் 28ஆம் தேதி தமிழக சட்டப்பேரவை கூடியது. அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் 4 நாட்களுக்கு பிறகு இன்று சட்டசபை கூட்டத்திற்கு வந்தார். 30 நிமிடம் சட்டசபை நிகழ்வுகளை கவனித்த அவர் பின்னர் அங்கிருந்து புறப்பட்டார்.


  T. T. V. Dhinakaran



சட்டசபைக்கு வெளியே செய்தியாளர்களை சந்தித்த டி.டி.வி. தினகரன்:-
 

ஆர்.கே.நகர் தொகுதியில் அடிப்படை வசதிகள் எதுவும் சரியாக செய்யப்படவில்லை. ஆளும் கட்சியினர் அந்த தொகுதியை புறக்கணிக்கின்றனர். ஆளும் கட்சியை தோற்கடித்த தொகுதி என்பதால் அந்த தொகுதி மக்களை புறக்கணிக்கும் வகையில் திட்டங்கள் கிடப்பில் போடுகிறார்கள். தண்ணீர் பிரச்சனை ஏற்பட்ட போது நாங்கள் லாரி மூலம் தண்ணீர் சப்ளை செய்தோம். அதன் பிறகுதான் ஆளும் கட்சியினர் முறையாக வினியோகம் செய்கின்றனர்.
 

எம்.பி. தேர்தல் முடிந்த பின்னர் அ.ம.மு.க. பதிவு செய்ய நிர்வாகிகள் கூட்டம் போடப்பட்டது. அப்போது நான், அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 2 பேரும் கையெழுத்து போட வேண்டாம். தனித்து செயல்படுங்கள் என்று சொன்னேன். அவர்கள் நலன் சார்ந்து தான் செயல்பட்டேன்.


 

ஆனால் எதற்காக என் மீது குறை கூறுகிறார்கள்? யார் சொல்லி இப்போது இப்படி பேசுகிறார்கள் என்பது எனக்கு தெரியும். பதவியை காப்பாற்றி கொள்ள அ.தி.மு.க.விற்கு சென்று உள்ளனர். 
 

தேர்தல் தோல்விக்கு பிறகு சில நிர்வாகிகள் வேறு கட்சிக்கு போய் இருக்கிறார்கள். அப்படி போகும் போது எனக்கு எதிராக பேசுகிறார்கள். பொதுமக்கள் மத்தியில் அ.ம.மு.க. வீழ்ச்சி அடைந்தது போன்ற பிம்பத்தை ஆளும் கட்சியும், எதிர் கட்சியும் உருவாக்க பார்க்கிறார்கள். நிர்வாகிகளை வைத்து கட்சி இல்லை. ஒரு நிர்வாகி போனால் ஒரு இயக்கம் வீழ்ச்சி அடைந்து விடாது. இவ்வாறு கூறினார்.
 



 

சார்ந்த செய்திகள்