Skip to main content

அதிமுக, திமுக வழியைப் பின்பற்றும் ஆர்.எஸ்.எஸ்... ஸ்டாலின் போட்ட உத்தரவு... களத்தில் இறங்கிய திமுகவினர்!

Published on 13/04/2020 | Edited on 13/04/2020


உலகம் முழுவதும் 18 லட்சத்திற்கும் அதிகமானோர் கரோனா வைரஸ் பரவலால் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், இதனால், 1.14 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர், 4.2 லட்சம் பேர் குணமடைந்து மீண்டுள்ளனர். இந்தியாவைப் பொறுத்தவரை 9000-க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸ் தொற்று காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர், 850-க்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். நாடு முழுவதும் கரோனா வேகமாகப் பரவிவரும் சூழலில், அதனைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக ஏப்ரல் 14 வரை ஊரடங்கு உத்தரவை அறிவித்தார் பிரதமர் மோடி.
 

dmk



இந்த நிலையில் தி.மு.க, அ.தி.மு.க மாதிரி தற்போது கரோனா நிவாரண உதவிப் பணிகளில் ஆர்.எஸ்.எஸ்.சும் களம் இறங்கியிருப்பதாகச் சொல்லப்படுகிறது. இது பற்றி விசாரித்த போது, ஆளும்கட்சி அமைச்சர்களும், மா.செ.க்கள் உள்ளிட்ட பிரமுகர்களும் அனைத்து இடங்களிலும் தங்களால் முடிந்த  அளவுக்கு, ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசின் நிவாரணப் பொருட்களை விநியோகித்து வருகிறார்கள். ஆனால் அந்த நிவாரணம் அதிமுக கட்சிக்காரர்ளுக்கு அது அதிகமாவே கிடைப்பதாகச் சொல்கின்றனர். 

அதேபோல் எதிர்க்கட்சியினரான தி.மு.க. மா.செ.க்களும் பிரமுகர்களும், ஸ்டாலினின் உத்தரவை ஏற்றுக் கொண்டு, ஏழை எளிய மக்களுக்கு அரிசி, மளிகைப் பொருட்கள், பாதுகாப்பு உபகரணங்கள், சாப்பாடு என்று விநியோகித்து கொண்டு இருந்தார்கள். இதை எல்லாம் பார்த்த ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகள், சரசர என்று களமிறங்கி வசதியான மார்வாடிகளையும், ஹோல் சேல் வியாபாரிகளையும் முற்றுகையிட்டு, ஜி.எஸ்.டி. விவகாரத்தில் சிக்கிக்கொள்ளாதீர்கள் என அன்பாக எச்சரித்து, பெருமளவு பொருட்களையும் கரன்ஸியையும் வாங்கி, பிராமணக் குடும்பங்களுக்கு மட்டும் விறு விறுப்பாக  விநியோகித்து கொண்டு வருவதாகச் சொல்லப்டுகிறது. அதை பெருமையாகவும் அறிவித்துள்ளார்கள். இதனால் மார்வாடிகள், வியாபாரிகள் தரப்பில், கரோனாவை விட இவங்க மோசமாக இருக்கிறார்கள் என்று ஏகத்துக்கும் புலம்பி வருவதாகச் சொல்லப்படுகிறது. 


 

சார்ந்த செய்திகள்