Skip to main content

'பாஜக - அதிமுக கூட்டணி முறிவுக்கு இதுதான் காரணம்' - திண்டுக்கல் சீனிவாசன் பேச்சு 

Published on 30/01/2024 | Edited on 30/01/2024
'This is the reason for the breakdown of the BJP-AIADMK alliance' - Dindigul Srinivasan's speech

அதிமுக - பாஜக இடையே கூட்டணி பிளவு ஏற்பட்டு தற்போது நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. அதிமுக தரப்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், சி.வி. சண்முகம் ஆகியோர் பாஜக உடனான கூட்டணி குறித்த கேள்விகளுக்கு செய்தியாளர்களிடம் அவ்வப்போது விளக்கங்கள் அளித்து வந்தனர். அதில் அண்ணாவை விமர்சித்தது தான் காரணம், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை பாஜக தலைவர் விமர்சித்ததுதான் காரணம் எனத் தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில் பாஜக - அதிமுக கூட்டணி முடிவுக்கு காரணம் என்ன என திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒட்டன்சத்திரத்தில் நடந்த எம்ஜிஆர் பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசுகையில், எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக பாஜக ஏற்காததால் நாங்கள் கூட்டணியை முடித்துக் கொண்டோம். பழனிக்கு காவடி தூக்குவோம் ஆனால் பாஜக தமிழக தலைவருக்கு காவடி தூக்க முடியாது.

தமிழக பாஜக தலைவர்தான் வருங்கால முதலமைச்சர் என பாஜகவினர் கூறி வந்தனர். இப்படி கூறுவதை அவர்களுடைய தலைமையிடம் கண்டிக்க சொல்லி முறையிட்டோம். அடுத்த முதல்வர் அவர்தான் என சொன்னால் நாங்கள் என்ன இளிச்சவாயர்களா? அமித்ஷா, நட்டாவிடம் முறையிட்ட பின் பாஜகவுடன் கூட்டணி இல்லை என எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்'' எனப் பேசியுள்ளார்.

சார்ந்த செய்திகள்