Published on 04/06/2019 | Edited on 04/06/2019

கவசமும், காவலனும் பாமக தான் என்பதை மக்கள் உணர்வார்கள் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் அவர்,
1. ’’தேசியக் கல்விக் கொள்கையில் இந்திப் பாடம் கட்டாயம் என்ற பரிந்துரை திரும்பப்பெறப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இந்தித் திணிப்புக்கு எதிராக குரல் கொடுத்த பாட்டாளி மக்கள் கட்சிக்கும், தமிழக மக்களுக்கும் கிடைத்த மாபெரும் வெற்றி இதுவாகும்!’’
2. சென்னை- -சேலம் 8 வழிச்சாலைத் திட்டத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் கூறியிருப்பது நிம்மதியளிக்கிறது. இந்தத் திட்டத்தால் உழவர்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் தடுக்கும் கவசமும், காவலனும் பாமக தான் என்பதை மக்கள் உணர்வார்கள்! இவ்வாறு கூறியுள்ளார்.