Published on 11/05/2019 | Edited on 11/05/2019

ரஜினி கட்சி ஆரம்பிக்கப்போகிறதை டெல்லியில் உள்ளவர்களும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்களாம்.
காங்கிரஸ் கட்சியின் சீனியர்களிடம் தமிழக நிலவரம் குறித்து ராகுல்காந்தி விசாரித்துள்ளார். அப்போது, சட்டமன்றத் தேர்தலுக்குதான் நான் அரசியலுக்கு வருவேன்னு சொன்ன ரஜினி, நடந்து முடிந்த தேர்தலில் பாஜக கூட்டணிக்கு ஓட்டுப்போடும்படி தன் மக்கள் மன்றத்தினருக்கு ரகசியமாக உத்தரவு போட்டிருக்கிறார்.
ரஜினியை பொறுத்தவரை அவர் மனதளவில் பாஜக ஆதரவாளர்கள்தான்னு சொல்லியிருக்கிறார்கள். எந்த ரியாக்சனும் இல்லாமல் இதனை அமைதியாக கேட்டுக்கொண்டாராம் ராகுல் காந்தி.