சமீபத்தில் சென்னையில் நடந்த துக்ளக் பத்திரிகையின் பொன்விழாவில் மறைந்த சோவின் நெருங்கிய நண்பரான ரஜினி கலந்து கொண்டு பேசியபோது, “1971-ல் உடை இல்லாமல் இருக்கும் ராமன் சிலைக்கு செருப்பு மாலை போட்டு பெரியார் ஊர்வலம் சென்றார் என்றும், முரசொலி வைத்திருத்திருந்தால் திமுகவினர், துக்ளக் வைத்திருந்தால் அறிவாளி என்றும் பேசினார். ரஜினியின் இந்த பேச்சுக்கு ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதனையடுத்து துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி வீட்டில் மர்ம நபர்கள் சிலர் பெட்ரோல் குண்டு வீச முயற்சி செய்ததாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிகழ்வுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கண்டனம் தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில் ரஜினி விவகாரத்தில், உள்துறை அமைச்சகத்திற்கு ரகசிய அறிக்கை ஒன்றை, மத்திய உளவுத்துறை அளித்துள்ளதாக தகவல் ஒன்று பரவி வருகிறது. அதில், ரஜினிகாந்த் துக்ளக் ஆண்டு விழாவில் பெரியார் குறித்து பேசியதற்கு மன்னிப்பு கேட்க முடியாது என்றும் கூறினார். இதற்கு திராவிட கட்சியினர் ரஜினி வீட்டின் முன்பு போராட்டம் நடத்தினர். அதனால் இந்த சம்பவத்திற்கு பின்னர் ரஜினிகாந்த் வீட்டிற்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டது. மேலும், ரஜினிக்கு கொலை மிரட்டல் விடுக்கப்படுவதாக மதுரை மாநகர காவல்துறை ஆணையரிடம் ரஜினி மக்கள் மன்றத்தினர் புகார் அளித்தனர். இந்நிலையில், ரஜினி விவகாரத்தில் உள்துறை அமைச்சகத்திற்கு ரகசிய அறிக்கை ஒன்றை, மத்திய உளவுத்துறை அளித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதனால் ரஜினிக்கு மிக விரைவில் இசட் ப்ளஸ் பாதுகாப்பு அல்லது ஒய் பிரிவு பாதுகாப்பு கொடுக்கப்படலாம் என்று சொல்லப்படுகிறது.