Skip to main content

"மோடி என்னை தனிப்பட்ட முறையில் அவமானப்படுத்துகிறார்" - ராகுல் காந்தி எம்பி

Published on 14/02/2023 | Edited on 14/02/2023

 

rahul gandhi mp talks about modi one day answer said situation 

 

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் கேரள மாநிலம் வயநாடு மக்களவைத் தொகுதி உறுப்பினருமான ராகுல் காந்தி எம்பி, ஒருநாள் சுற்றுப் பயணமாக கேரளா வந்துள்ளார். அப்போது நேற்று மாலை மீனங்காடி என்ற பகுதியில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய ராகுல் காந்தி, "பிரதமர் மோடிக்கும் அதானிக்கும் இடையே உள்ள நெருக்கம் குறித்து நாடாளுமன்றத்தில் பேசியது அனைத்தும் உண்மையாகும். ஆனாலும் நான் பேசிய அனைத்தையும்  அவைக் குறிப்பில் இருந்து நீக்கிவிட்டனர்.  மோடி வெளிநாட்டு பயணங்கள் மேற்கொள்ளும் போதெல்லாம் அவருடன் அதானியும் செல்வது ஏன்? வெளிநாடுகளில் பல்வேறு வியாபார ஒப்பந்தங்களில் அதானி கையெழுத்திடுவது எப்படி? அதானிக்காக இங்கு பல்வேறு சட்டங்கள் மீறப்பட்டுள்ளன.  நாட்டில் உள்ள அனைத்து விமான நிலையங்களையும் அதானி வாங்குவது எப்படி?  இதற்கு எல்லாம் காரணம் இருவருக்கும் இடையே உள்ள நெருக்கம் தான்.

 

நாடாளுமன்றத்தில் நான் பேசியதற்கு எல்லாம் ஆதாரம் வேண்டும் என்று நாடாளுமன்ற செயலாளர் கூறினார். அனைத்திற்கும் ஆதாரம் தருகிறேன் என்று நான் கூறினேன்.  மோடி என்னை தனிப்பட்ட முறையில் அவமானப்படுத்துகிறார். ஆனால் அவற்றை எல்லாம் நான் பொருட்படுத்தவில்லை. என்னுடைய பெயருடன் நேரு என்ற பெயரை ஏன் சேர்க்கவில்லை என்றும் காந்தி என்று சேர்த்தது ஏன் என்றும் கேட்கிறார். இந்தியாவில் தந்தையின் குடும்ப பெயரைத்தான் பின்னால் சேர்ப்பார்கள் என்று அவருக்கு தெரிந்திருக்க நியாயம் இல்லை.

 

மோடியின் கைகளில் அனைத்து ஏஜென்சிகளும் இருக்கலாம் அதற்காக எல்லாம் நான் ஒருபோதும் பயப்படப் போவதில்லை. கண்டிப்பாக ஒருநாள் சத்தியத்திற்கு பிரதமர் மோடி பதில் சொல்ல வேண்டிய நிலைமை  வரும்" என்று பேசினார். 

 

 

சார்ந்த செய்திகள்