கர்நாடகாவில் தேர்தல்களம் அனல் பறந்து வருகிறது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வைக் கண்டித்து கர்நாடகாவில் கோலார் கிராமத்தில் மிதிவண்டியை எடுத்துக்கொண்டு அதில் பயணம் செய்துகொண்டே போராட்டத்தை நடத்தினார். அதன்பின் மாட்டுவண்டியில் ஏறிக்கொண்டு பா.ஜ.க பெட்ரோல் மற்றும் டீசல் விலை ஏற்றியது குறித்து மக்களிடம் பரப்புரை செய்தார்.
அப்போது ராகுல் கூறியது. "உலகெங்கிலும் பெட்ரோல் விலை குறைந்துகொண்டே வருகிறது. இந்தியாவில் மட்டும் ஏன் ஏறிக்கொண்டே வருகிறது. பெட்ரோலின் விலை உலக சந்தையில் ஒரு பீப்பாயின் விலை 140டாலர்களாக உள்ளன. ஆனால் தற்போது அதன் விலை 70 டாலராக குறைந்துள்ளது. இதன் மூலம் மக்களுக்கு குறைந்த விலையில் பெட்ரோலை அளிக்கவேண்டியது தானே. சரி பெட்ரோல் மற்றும் டீசலுக்கு ஜி.எஸ்.டி வரி போடாத காரணத்தை நீங்கள் ஏன் மக்களிடம் சொல்லவில்லை. பா.ஜ.க அரசு சாதாரண மக்களிடமிருந்து பணத்தை பிடுங்கி பணக்காரர்களுக்கு அளித்து வருகிறது. நீங்கள் ஸ்கூட்டர், லாரி, பஸ் ஓட்டுபவர்களின் பாக்கெட்டிலிருந்து பணத்தை எடுத்து உங்கள் பணக்கார நண்பர்களுக்கு அளிக்கிறீர்கள்" என்று ராஜிவ் காந்தி பா.ஜ.க.வை விமர்சித்துள்ளார். இதேபோன்று ராகுல் காந்தி மூன்று நாட்கள் கோலார், பெங்களூர் கிராமப்புற, சிக்கிக்காப்பூர், தும்கூர் மாவட்டங்களிலும் பிரச்சாரம் செய்யவுள்ளார்.