Skip to main content

“போடும் மீம்ஸ்கள் முள் போல குத்துகிறது; 23 ஆம் புலிகேசியிலேயே இதெல்லாம் பார்த்தாச்சு” - அண்ணாமலை பேட்டி

Published on 23/03/2023 | Edited on 23/03/2023

 

nn

 

அண்மையில் செய்தியாளர்கள் சந்திப்பில், ‘9 ஆண்டுகள் காவல்துறையில் தான் சம்பாதித்த பணத்தை அவரக்குறிச்சி தேர்தலில் செலவு செய்து தற்போது கடனாளியாக இருக்கிறேன்’ என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்திருந்தார். அதுகுறித்து தமிழக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கருத்து தெரிவிக்கையில், ‘9 ஆண்டுகளில் ஒரு காவல்துறையை சேர்ந்த அதிகாரி 30 கோடி ரூபாய் சம்பாதித்திருப்பார் என்பது சாத்தியமா?’ எனக் கேள்வி எழுப்பியதோடு, ‘தேர்தலில் அவரது சொந்த காசை செலவு செய்தாரா என்பதே தெரியவில்லை இதில் கடனாளியாக இருக்கிறேன் என்று வேறு சொல்லி இருக்கிறார்’ என விமர்சித்திருந்தார்.

 

இந்நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அண்ணாமலை, “தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு என்பது வடிவேல் நடித்த 23 ஆம் புலிகேசி படத்தில் இருப்பது போல் இருக்கிறது. அந்தப் படத்தில்  மன்னராக இருக்கும் வடிவேல் அவரைப் பார்க்க வரும் அமைச்சர்களிடம் இன்று நம்மைப் பற்றி யார் தப்பாக சொல்லி இருக்கிறார்கள் எனக் கேட்பார். அது மாதிரி தமிழக முதல்வரை பொறுத்தவரை காலையில் டிஜிபி மற்றும் ஏடிஜிபியிடம் நம்மை பற்றி யார் சமூக வலைத்தளங்களில் தப்பாக பேசுகிறார்கள் என்று கேட்டு அவர்களை மூன்று மணி, நான்கு மணி, ஐந்து மணிக்கு சென்று தூக்கி வந்து ரிமாண்ட் செய்வதற்கு தான் இந்த அரசு முனைப்பு காட்டுகிறதே தவிர பெண்களின் மீது, குழந்தைகளின் மீது வன்மத்தை யார் கக்குகிறார்களோ அவர்கள் மீது அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

 

தமிழகத்தில் சோசியல் மீடியாவில் மீம்ஸ் போட்டான்; கருத்து போட்டான்; கார்ட்டூன் போட்டான் என அவர்களை கைது செய்வதற்கு காவல்துறை அங்கும் இங்கும் ஓடிக் கொண்டிருக்கிறது. இதெல்லாம் 23 ஆம் புலிகேசி படத்தில் நாம் பார்த்தது தான். எந்த ஒரு மன்னன், எந்த ஒரு அரசன், எந்த ஒரு ஆட்சியாளன் இன்செக்யூராக இருக்கிறானோ அவனுக்கு சமூக வலைத்தளத்தில் போடப்படும் கருத்துக்கள் முள்ளு மாதிரி குத்தும் என்பார்கள். நமது முதலமைச்சருக்கு சமூக வலைத்தளத்தில் வரும் கருத்துக்கள் குத்துவதைப் போல தெரிகிறது. இவ்வளவு ஆண்டுகளாக அரசியலில் இருக்கிறார்கள். பாரம்பரியமான குடும்பத்தில் இருந்து வந்திருக்கிறார்கள். ஆனால் 18 வயது பையன், 19 வயசு பசங்களை எல்லாம் கைது செய்து சிறையில் போடுவது எந்த அளவிற்கு முதல்வரின் பெருந்தன்மையை காட்டுகிறது. 

 

ஒருபுறம் ஆணவப் படுகொலை நடக்கிறது. அதையெல்லாம் விட்டுவிட்டு சமூக வலைத்தளத்தின் மீது மட்டும் காவல்துறை கண்ணாக இருப்பது சட்ட ஒழுங்கு பராமரிப்பு இன்மையை காட்டுகிறது. அண்ணாமலை எவ்வளவு சொத்து வச்சிருக்கான்; எவ்வளவு சம்பாதிச்சான்; கர்நாடகாவில் ஒன்பதறை வருடத்தில் ஒரு பைசா லஞ்சம் வாங்கி இருக்கானா என முழு கர்நாடகாவை தேடிப் பிடித்து சல்லடை போட்டு தமிழகத்தில் இருக்கக்கூடிய 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவல்துறையின் நண்பர்களை அனுப்பி ஒருவரை கொண்டு வந்து பிரஸ் மீட் நடத்துங்கள் நான் பதில் சொல்கிறேன்” என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்