புதுச்சேரியில் மழைநீர் தேங்காமல் இருப்பதற்கு புதுச்சேரி முதலைமச்சர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.
அதில் காமராஜர் தொகுதிக்கு உட்பட்ட குடியிருப்புகளில் மழைநீர் தேங்காமல் இருக்க 9 கோடியே 66 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பணிகள் துவங்கியுள்ளது. இந்த திட்டத்தை முதல்வர் ரெங்கசாமி அக்டோபர் 20ம் தேதி துவங்கி வைத்தார். மேலும் திட்டம் துவங்குவதற்கு முன் செய்யப்படும் பூஜையில் குடும்பத்திற்கு ஒருவர் கலந்து கொள்ளுமாறு அந்த தொகுதியின் பாஜக எம்.எல்.ஏ ஜான்குமார் அழைப்பு விடுத்திருந்தார்.
நிகழ்வு முடிந்த பின் பேசிய சட்டமன்ற உறுப்பினர் ஜான்குமார், “20 ஆண்டுகளாக இருந்த பிரச்சனைக்கு தீர்வு கிடைத்திருக்கிறது. இந்த பணிகள் நன்றாக முடிந்தது என்றால் வேளாங்கண்ணி மாதாவிடம் மொட்டை போடுவேன் என வேண்டிக் கொண்டேன். இதுவரை என் வாழ்க்கையில் எனக்கு ஐந்து வயது இருக்கும்போது மொட்டை போட்டிருக்கேன். இந்தப் பணிகள் வெற்றிகரமாக முடிந்தால் மொட்டை போடுவேன் என வேண்டி இருந்தேன். தனது பிரார்த்தனை நிறைவேறியதால் மொட்டை அடிக்கப் போகிறேன்” எனக் கூறினார்.