Published on 28/03/2023 | Edited on 28/03/2023

அதிமுக ஒருங்கிணைப்பாளராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டதிலிருந்து தென்மாவட்டங்களில் உள்ள பகுதிகளில் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியைக் கண்டித்து ‘துரோகி’ போஸ்டர்களைத் தொடர்ந்து ஒட்டி வருகின்றனர். குறிப்பாக, விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சில ஊர்களில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான இந்தப் போஸ்டர் யுத்தம் தொடர்ந்து நடந்து வருகிறது.
இந்நிலையில் அருப்புக்கோட்டையில் முதல் முறையாக கழக துரோகி ஓபிஎஸ் என அருப்புக்கோட்டை நகர கழகம் சார்பாக போஸ்டர் ஒட்டியிருக்கின்றனர். கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்ட நிலையில், சட்டமன்றத்தில் கழகத்தின் பெயரைப் பயன்படுத்தி குளிர்காய நினைக்கிறார் எனக் குறிப்பிட்டு அந்தக் கண்டனச் சுவரொட்டியை ஒட்டியிருக்கின்றனர்.