Skip to main content

கூட்டணியை விட்டு வெளியேற  முடிவா? பாமகவின் அதிரடி திட்டம்! 

Published on 05/09/2019 | Edited on 05/09/2019

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக, பாஜக கூட்டணியில் பாமக கட்சி இடம் பெற்றது. பாமக கட்சிக்கு 7 நாடாளுமன்ற தொகுதிகளும், ஒரு ராஜ்யசபா சீட்டும் ஒதுக்கினர். இதில் பாமக போட்டியிட்ட அனைத்து நாடாளுமன்ற தொகுதிகளிலும் தோல்வி அடைந்தது. இதற்கு முன்பு நடைபெற்ற 2016 சட்ட மன்ற தேர்தலில் பாமக தனித்து போட்டியிட்டு அனைத்து இடங்களிலும் தோல்வியை சந்தித்தது. அப்போது நடைபெற்ற தேர்தலில் 5 சதவிகித வாக்குகளை மட்டுமே பெற்றது. மேலும் மாநில கட்சி அந்தஸ்தை இழக்கும் நிலைக்கு பாமக சென்றது. இந்த நிலையில் உள்ளாட்சித் தேர்தல் வரை அ.தி.மு.க.வோடு கூட்டணியை வைத்துக்கொண்டு, அதன் பிறகு திராவிட இயக்கங்களுடன் இனி எந்தக் காலத்திலும் கூட்டணி வைத்துக்கொள்ள கூடாது என்ற மனநிலைக்கு பாமக தலைமை முடிவெடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது. 
 

pmk



இதனால் அடுத்த சட்டமன்ற தேர்தலுக்குள் கட்சியை பலப்படுத்த சகோதரர்கள் படை, சகோதரிகள் படை என்று புதிய அணிகளை உருவாக்கும் ஆலோசனையில் அன்புமணி இருப்பதாக கூறுகின்றனர். இந்த குழுக்கள் ஒவ்வொன்றிலும் தலா 2500 உறுப்பினர்கள் இருப்பார்கள் என்றும், இந்த குழுவில் இருக்கும் ஒருவர்  50 புதிய உறுப்பினர்களை கட்சியில் சேர்க்க வேண்டும் என்ற உத்தரவும் பிறப்பிக்க பாமக முடிவெடுத்துள்ளதாக கூறுகின்றனர். இப்படி ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும் தலா ஒரு லட்சம் புதிய உறுப்பினர்கள் வீதம் சேர்த்து, கட்சியை வலிமை படுத்திவிட்டு வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் தனித்து போட்டியிட்டு ஆட்சியை கைப்பற்ற பாமக தரப்பில் தீவிர முயற்சியில் இறங்க இருப்பதாக அக்கட்சி வட்டாரங்கள் கூறுகின்றனர்.  

சார்ந்த செய்திகள்