செப்டம்பர் மாதத்தில் ரிலீஸ் ஆக சசிகலாவிற்கு வாய்ப்பு இருப்பதாக டெல்லித் தரப்பில் இருந்து சிக்னல் கிடைத்துள்ளதால், சசிகலா தரப்பிடம் அதிக உற்சாகம் தெரிகிறது. அதோடு அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளர் பதவி சசிகலாவுக்கு கிடைக்குமா என்ற கேள்வி அ.தி.மு.க.வின் அடிமட்டத் தொண்டர்கள் வரை விவாதத்தைக் கிளப்பியிருக்கிறது.
அதேநேரத்தில், சசிகலா சைடில் கவனமாக காய் நகர்த்தி வருவதாகச் சொல்லப்படுகிறது. அ.தி.மு.க.வில் சசிக்கு எதிரான மனநிலையில் இருந்த ஓ.பி.எஸ்.சையும், நாம் இருவரும் ஒரே சமூகம் என்று சசிகலா தரப்பு தங்கள் பக்கம் கொண்டுவந்து விடுவார்கள் என்று கூறிவருகின்றனர். எடப்பாடியிடமும் தினகரனிடமும் கைகட்டி நிற்பதற்கு சசிகலா எவ்வளவோ மேல் என்கின்ற மனநிலைக்கு ஓ.பி.எஸ்.சும் வந்துவிட்டதாகச் சொல்லப்படுகிறது.
மேலும் சொத்துக்குவிப்பு வழக்கில் நீதிபதி குன்ஹா கொடுத்த தீர்ப்பை, தான் ஏற்கவில்லை என்று காட்டத்தான் அவருக்கு விதிக்கப்பட்ட 10 கோடி அபராதத்தை அவர் கட்டவில்லை என்று கூறுகின்றனர். சீராய்வு மனு மூலம், தனக்கு வழங்கப்பட்ட தீர்ப்பை உடைத்துவிட்டால், தேர்தலில் நிற்பதற்கும் தனக்குத் தடை இருக்காது என்று சசிகலா நினைப்பதாகச் சொல்லப்படுகிறது. சசியின் முதல்வர் கனவு இன்னும் கலையவில்லை என்று மன்னார்குடித் தரப்பு கூறிவருகின்றனர்.