Skip to main content

எதிர்க்கட்சிகள் தவறான கருத்தை பரப்பி வருகிறார்கள்... யுவராஜ் 

Published on 08/01/2020 | Edited on 08/01/2020

 

சிதம்பரத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் இளைஞர் அணி தலைவர் யுவராஜ் செய்தியாளர்களை சந்தித்தார்.

 

TMC



அப்போது, தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நியாயமான முறையில் நடைபெற்றது. தேர்தல் ஆணையத்திற்கு நன்றி. இதில் தமிழ் மாநில காங்கிரஸ் குறுகிய காலத்தில் சின்னத்தை பெற்று வெற்றியை பெற்றுள்ளது. அதிமுக கூட்டணியில் தர்மத்தை மீறி தமாகா வேட்பாளர்கள் போட்டியிடும் இடத்தில் அவர்களும் போட்டியிட்டுள்ளனர். இதுகுறித்து தலைமையின் கவனத்திற்கு எடுத்துச் செல்வோம். இதுபோன்ற நடவடிக்கையை தவிர்த்திருந்தால் தமாகா இன்னும் கூடுதலாக வெற்றி பெற்றிருக்கும்.
 

திமுக உள்ளாட்சி தேர்தல் நடைபெறாத வகையில் அனைத்து வேலைகளையும் செய்தது. தேர்தலில் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் 50 சதவீதமான வெற்றியை மட்டும் பெற்றுள்ளது. குடியுரிமை திருத்த சட்டத்தை பற்றி தவறான செய்தியை பரப்பி வருகிறார்கள். இது கண்டிக்கத்தக்கது. குழப்பம் ஏற்படுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும்.


 

 

தமிழக அரசு பொங்கலுக்கு அறிவித்துள்ள ரூபாய் ஆயிரத்தை அனைத்து மக்களுக்கும் கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். பொங்கல் நேரத்தில் வெளியூர்களுக்கு செல்லும்போது கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படும், இதனை சமாளிக்க 20 சதவீத பேருந்துகளை கூடுதலாக இயக்க வேண்டும். ஜே என் யூ பல்கலைக்கழகத்தில் தாக்குதல் சம்பவம் கண்டிக்கத்தக்கது. பல அறிஞர்களை உருவாக்கியது ஜே என் யூ பல்கலைகழகம். இதனை மாணவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். இன்னும் பல பொருட்களில் ஜிஎஸ்டி வரிகளை குறைக்க நடவடிக்கை எடுக்க தமாகா வலியுறுத்தும் என்றார்.

 


 

 

 

சார்ந்த செய்திகள்