நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக அதிகப்படியான இடங்களில் வெற்றிபெற்றுள்ளது. இந்நிலையில் ''கோவை இனி முதல்வர் மு.க.ஸ்டாலினின் கோட்டை'' என மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் கொங்குப் பகுதியான கோவை உள்ளிட்ட இடங்களில் அதிகப்படியான இடங்களில் அதிமுக வெற்றி பெற்றிருந்தது. இதனால் கோவை அதிமுகவின் கோட்டை என அதிமுகவினர் கூறிவந்தனர். அதேபோல் பாஜகவிற்கு அதிக பலம் உள்ள இடமாகவும் பாஜகவினரால் கூறப்பட்டு வந்தது. இந்நிலையில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில்,'' கோவை அதிமுகவின் கோட்டை என மக்கள் ஒருபோதும் சொல்லவில்லை. கோவை இனி முதல்வர் மு.க.ஸ்டாலினின் கோட்டைதான். முதல்வர் மீது மக்கள் வைத்திருந்த நம்பிக்கையால் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக வெற்றிபெற்றுள்ளது'' என்ற மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
அதேபோல் விவசாயிகளுக்கான இலவச மின் இணைப்பு பழைய முறைப்படியே வழங்கப்படும் என்ற தகவலையும் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.