Published on 13/09/2018 | Edited on 13/09/2018



மதுரை செல்லூரில் உள்ள கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜுவை, இன்று காலை அவரது இல்லத்தில் சந்தித்தார் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி. மு.க.அழகிரியை செல்லூர் ராஜு ஆதரவாளர்கள் வரவேற்றனர்.
செல்லூர் ராஜுவின் தாயார் ஒச்சம்மாள் கடந்த சில தினங்களுக்கு முன்பு காலமானார். இதனையொட்டி மு.க.அழகிரி இன்று காலை செல்லூர் ராஜு வீட்டிற்கு நேரில் சென்று இரங்கல் தெரிவித்தார்.