பீகார் முதல்வர் நிதிஷ்குமார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் மற்றும் அமைச்சர்கள் தங்களது சொத்துகளின் பட்டியலை தற்போது வெளியிட்டுள்ளனர்.
அதன்படி முதல்வர் நிதிஷ்குமாருக்கு அசையும் சொத்து 16.68 லட்சமும் அசையா சொத்து 58.85 லட்சமும் உள்ளது. முதலமைச்சர் கையிருப்பாக ரூ. 28,115 உள்ளது. மேலும் அவருக்குச் சொந்தமாக 12 பசுக்களும் 10 கன்றுகளும் உள்ளது. 50 ஆயிரம் பணம் வங்கிக் கணக்கிலும் ஒரு லட்சம் மதிப்புள்ள நகைகளும் உள்ளன.
இதேபோல் பீகார் மாநில அமைச்சர்களும் தங்களது சொத்துப் பட்டியலை வெளியிட்டனர். அதில் அவர்களது சொத்து மதிப்பு முதலமைச்சரை விட அதிகமாக இருப்பதை அவர்களே தெரியப்படுத்தியுள்ளனர்.
உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அமைச்சர் லெசி சிங் தனக்கு 1 கோடிக்கும் மேல் சொத்து இருப்பதாகவும் ரூ. 1.05 கோடி மதிப்பிலான நிலம் இருப்பதாகவும் கூறியுள்ளார்.
விவசாயத்துறை அமைச்சர் குமார் சர்வ்ஜித்துக்கு அசையும் சொத்து 5 கோடியே 2 லட்சம் உள்ளது. இது தவிர, 7.97 லட்சம் வங்கி இருப்பு, ஐந்து லட்சம் பாலிசி, 2019 மாடல் டாடா சஃபாரி மற்றும் வேகன்ஆர் கார் மற்றும் 4.75 லட்சம் மதிப்புள்ள நகைகளும் உள்ளது. இந்நிலையில் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களின் சொத்து விவரங்கள் பீகாரில் விவாதங்களைக் கிளப்பியுள்ளது.