Skip to main content

ஜெயலலிதாவிற்கு பிறகு அதிமுகவில் இவர் தான்... இயக்குனர் பேரரசு அதிரடி ட்வீட்... அதிருப்தியில் இபிஎஸ்!

Published on 04/02/2020 | Edited on 04/02/2020

சமீபத்தில் அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தனியார் தொலைக்காட்சியில் பேசும் போது,  தமிழகத்தில் இஸ்லாமிய அமைப்புகள் தீவிரவாதத்தை தூண்டுகின்றது. இது நீடித்தால் இந்து பயங்கரவாதம் உருவாவதை எவராலும் தடுக்க முடியாது." என்று பேசினார். அதிமுக அமைச்சரின் சர்ச்சை பேச்சுக்கு பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து திமுக தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான ஸ்டாலின் ராஜேந்திர பாலாஜி நாட்டின் அமைதியை சீர்குலைக்கும் விதமாக பேசியுள்ளதாகவும், எனவே அவரை உடனடியாக டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்றும் கூறியிருந்தார். மேலும், ராஜேந்திர பாலாஜியின் இந்த செயல் குறித்து ஆளுனரிடம் முறையிட போவதாகவும் மு.க.ஸ்டாலின் கூறியிருந்தார். பின்பு அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியது குறித்து அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசும் போது, அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியது அவருடைய தனிப்பட்ட கருத்து. அது அதிமுகவின் கருத்து அல்ல! எனவே, இதுகுறித்து ஆளுனரிடம் எந்த அடிப்படையில் ஸ்டாலின் முறையிட முடியும்? என்றும் கேள்வி எழுப்பினார். 
 

bjp



இந்த நிலையில், சமீபத்தில் பாஜகவில் இணைந்த நடிகரும், இயக்குனருமான பேரரசு தனது ட்விட்டர் பக்கத்தில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி குறித்தும், திமுக தலைவர் ஸ்டாலின் குறித்தும் கருத்து தெரிவித்துள்ளார். அதில், அதிமுகவில் ஜெயலலிதாவுக்கு பிறகு துணிச்சலான ஆளு அமைச்சர்  ராஜேந்திர பாலாஜிதான்! இந்துவாய் இருந்துகொண்டு  இந்து மதத்தை இழிவாய் பேசி பிற மதத்தை ஆதரிப்பது சரியாம், ஒரு இந்து ,இந்து மதத்தை ஆதரித்து பேசினால் அவர் பதவியை பறிக்கனுமாம்! நல்ல மதசார்பின்மை!!! என்று கூறியுள்ளார். இந்த கருத்துக்கு சமூக வலைத்தளங்களில் ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்