மதுரை காமராஜர் சாலை, பழைய குயவர் பாளையம் பகுதியை சேர்ந்த 2000 ஏழை குடும்பங்களுக்கு அ.தி.மு.க. மாநில மாணவர் அணி இணை செயலாளர் குமார் சார்பில் இலவச அரிசி, காய்கறி, பலசரக்கு உள்ளிட்ட பொருள்களை தமிழக கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜூ வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த செல்லூர் ராஜு, ரேசன் பொருட்களை சரியாக விநியோகிக்காத ரேசன் கடைகளில் ரகசிய அதிரடி ஆய்வு தொடர்ந்து நடைபெறும். கரோனா தொற்று பரவாமல் இருக்க மக்களே சமூக இடைவெளியை கடைபிடித்து வீட்டை விட்டு வெளியே வருவதை தவிர்த்து பாதுகாப்புடன் இருக்க வேண்டும். இது ஆணை இல்லை, அரசு மக்களுக்கு வேண்டுகோளாகதான் வைத்துள்ளது. எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் இந்த அ.தி.மு.க. ஆட்சியினை குறை கூற முடியாததால், பேச வேண்டும் என்பதால் எதை எதையோ பேசி அரசின் மீது குற்றம் சாட்டி வருகிறார்.
தி.மு.க. எம்.எல்.ஏ. அன்பழகன் திராவிட இயக்கத்தின் சொத்து. சட்டமன்றத்தில் அ.தி.மு.க.வை அதிகமாக எதிர்த்து பேசுபவர் அன்பழகன். ஆனால் அவரை கட்சி பேதமின்றி காப்பாற்ற இந்த அரசு நடவடிக்கை எடுக்கும். திராவிட இயக்கத்தை சேர்ந்தவர்கள் எந்த கட்சியில் இருந்தாலும் அவர்களை பாதுகாப்பது எங்கள் கடமை என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார்.