நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி 353 இடங்களை கைப்பற்றி தனி பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றியது.இதில் பாஜக மட்டும் 303 இடங்களை கைப்பற்றியது.தமிழகத்தில் அதிமுக,பாஜக கூட்டணி போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் படுதோல்வியை சந்தித்தது.இதனால் பாஜக தலைமைக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.தமிழகத்தில் ஜாதி ரீதியான ஓட்டுக்களை குறிவைத்து ஜாதி கட்சிகளுடன் கூட்டணி வைத்தும் ஒரு இடத்தை தவிர அனைத்து தொகுதியிலும் தோல்வியை சந்தித்தது ஏன் என்று தமிழக பாஜக நிர்வாகிகளிடம் ரிப்போர்ட்டை கேட்டு உள்ளது பாஜக தலைமை.
இந்த நிலையில் தமிழக பாஜக நிர்வாகிகள் அறிக்கை ஒன்று ரெடி செய்துள்ளனர் அதில்,அதிமுக தலைமை இடைத்தேர்தலில் மட்டுமே கவனம் செலுத்தியதால் நாடாளுமன்ற தேர்தலை கண்டுகொள்ளவில்லை என்றும், இன்னும் அதிமுகவில் உட்கட்சி பூசல் அதிகமாக இருந்ததால் கூட்டணி கட்சி வேட்பாளர்களை கண்டுகொள்ளவில்லை என்றும் அந்த அறிக்கையில் இருப்பதாக சொல்லப்படுகிறது.
மேலும் சீட் கிடைக்காத அதிருப்தியாளர்கள் இந்த தேர்தலில் களப்பணியில் ஈடுபடவில்லை என்றும் கூறி இருப்பதாக சொல்லப்படுகிறது.ஆனால் பாஜக தலைமை உளவுத்துறை மூலம் கேட்டறிந்த ரிப்போர்ட் படி தமிழக பாஜக நிர்வாகிகள் மீது மக்களுக்கு இருக்கும் வெறுப்புணர்வும் காரணம் என்று சொல்லப்படுகிறது. இதனால் தமிழக பாஜகவில் மாற்றம் நிகழும் என்று பாஜக வட்டாரங்கள் கூறிவருகின்றனர்.இதனால் தமிழக பாஜக நிர்வாகிகளை கூண்டோடு மாற்ற பாஜக தலைமை திட்டமிட்டிருப்பதாக சொல்லப்படுகிறது.இந்த செய்தியால் தமிழக பாஜக நிர்வாகிகள் கவலையில் இருப்பதாக சொல்லப்படுகிறது