Skip to main content

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா இருவரும் மிகப்பெரிய தலைவர்கள்... இவர்களோடு நடிகர் விஜய்யை ஒப்பிடுவதா... அமைச்சர் காமராஜ் ஆவேசம்

Published on 08/09/2020 | Edited on 08/09/2020

 

MGR and Jayalalithaa both are great leaders. Don't compare with actor Vijay; Minister Kamaraj

 

 

பயிர் காப்பீட்டு தொகையில் சில குளறுபடிகள் உள்ளதால் மீண்டும் மறு அளவீடு கணக்கீட்டு அனைவருக்கும் பயிர் காப்பீடு வழங்கிட வேண்டும் என்கிறார்  உணவுத்துறை அமைச்சர் காமராஜ்.

 

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் அ.தி.மு.க தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்டம் முழுவதிலிருந்தும் தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய உணவுத்துறை அமைச்சர் காமராஜ், "1996 ஆம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சி சிறப்பாக செயல்பட்டது.  அப்போது அந்த ஆட்சியை பற்றி,   இல்லாத பொல்லாததை கூறினார்கள்.  

 

ஒரு குடும்பம் டிவி சேனல் ஆரம்பித்தது. அந்த காலகட்டத்தில் டிவி சேனலுக்கு ஒரு பெரிய மரியாதை  இருந்தது. ஜெயலலிதா ஆட்சியை பற்றியே கூறி 1996ல்  வெற்றி  வாய்ப்பை  இழக்க செய்தனர். அதற்கு காரணம் மக்களிடம் தவறான  கருத்துகளை  கொண்டு சென்றதுதான் அன்றைக்கு தவறான செய்திகள்  நம்பப்பட்டது".  என்று தி.மு.கவை மறைமுகமாக பேசினார்.

 

kamaraj

 

 

பிறகு செய்தியாளர்களிடம்  கூறுகையில், "தமிழ்நாடு முழுவதும் 5 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு இளைஞர்களை உட்படுத்த வேண்டும் என தலைமையில் உத்திரவிட்டுள்ளனர். அதன் அடிப்படையில் கூட்டங்கள் நடத்தப்பட்டுவருகிறது. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா இருவரும் மிகப்பெரிய தலைவர்கள் இவர்களோடு யாரையும் ஒப்பிட முடியாது. அவர்களோடு நடிகர் விஜய்யை ஒப்பிடுவது தவறானது.  இதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. கிசான் கார்டு உதவி வழங்கும் திட்டத்தில் முறைகேடுகள் குறித்து முறையாக விசாரிக்கப்பட்டு சம்மந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு  வருகிறது.

 

பயிர் காப்பீட்டு தொகை என்பது பயிர் காப்பீட்டு  நிறுவனம் வழங்குவது. கணக்கில் சில குளறுபடிகள் உள்ளதால் மீண்டும் அளவீடு கணக்கீட்டு அனைவருக்கும் பயிர் காப்பீடு வழங்கிட வேண்டும் என தொடர்ந்து நாங்களும் வலியுறுத்தி வருகிறோம். சில அளவீடுகளை வைத்து கணக்கு எடுத்து வருகிறார்கள். அந்த வகையில் வழங்க முடியாததாக இருந்தபோதிலும் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்பதுதான் தமிழக அரசின் நோக்கம்." என்று கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்