இன்று பத்திரிக்கையாளர் சந்திப்பில், பா.ஜ.க.வின் மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், "கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைய மின்னஞ்சலில் எனக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள வெற்றிடத்தை நடிகர்களால் நிரப்ப முடியாது." எனத்தெரிவித்திருந்தார்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக மக்கள் நீதி மய்யத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் ஒரு ட்வீட் செய்யப்பட்டுள்ளது. இது இரண்டு பகுதியாக வந்துள்ளது. அதில்,
"உங்கள் இணையதளத்தில் இருந்து உறுப்பினர் பதிவுக்கான அழைப்பு வந்த ஆதாரம் , எங்களிடம் இருக்கிறது தமிழிசை அவர்களே... நீங்கள் காட்டியது போல நாங்களும் "படம்" காட்ட விரும்பவில்லை. உலகமே உங்களை அழைத்து விசாரிக்கக் கூடாதல்லவா ? (Part-I)
ஆதலால் உங்கள் தொலைபேசி எண்ணில் மட்டும் தற்போதைக்குக் கரி பூசியிருக்கிறோம். உங்கள் பழைய முதலாளிகளின் கோபத்தை அஞ்சினால் செய்த பதிவை ரத்து செய்து கொள்ளவும், வழியிருக்கிறது. அதுவரை... பதிவு செய்தமைக்கு நன்றி (Part-II)" என ட்விட் செய்யப்பட்டுள்ளது.
இதில் உறுப்பினர்கள் பெயர் பட்டியலில் தமிழிசை பெயர் இருக்கிறது. என ஒரு புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளனர்.