தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் கடந்த டிசம்பர் 27 மற்றும் 30ஆம் தேதிகளில் இரண்டு கட்டமாக நடைபெற்றது. இதில் போட்டியிட்ட வேட்பாளர்கள் நூதனமாகவும், வித்தியாசமான முறையிலும் வாக்கு சேகரித்தனர்.
![Candidate](http://image.nakkheeran.in/cdn/farfuture/Px9k0CydHp2fvwsGe7QQjcLJCgmzEYeJVcNFK5PMwS0/1577971971/sites/default/files/inline-images/605_5.jpg)
அரியலூர் மாவட்டம், செந்துறை ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு செல்லம் கடம்பன் போட்டியிட்டார். இந்த தம்பதியினருக்கு கத்திரிக்காய் சின்னம் ஒதுக்கப்பட்டது. இவருக்கு கிடைத்தது போல் கத்திரிக்காய் சின்னம் கிடைத்த மற்றப் பகுதியில் போட்டியிட்டவர்கள் கத்திரிக்காயை மாலையாக கோர்த்து போட்டுக்கொண்டு வாக்கு சேகரித்தனர். சிலர் கத்திரிக்காயை கால் கிலோ, அரை கிலோ கொடுத்து வாக்கு சேகரித்தனர். ஆனால் இந்த தம்பதிகள் மக்களிடையே வாசிக்கும் வழக்கம் வளரவேண்டும், படிக்கும் பழக்கம் பரவவேண்டும் என்பதற்காக புத்தகங்களைக் கொடுத்து வாக்கு சேகரித்தனர். சுற்றுச் சூழல் பாதுகாப்பு, நுகர்வோர் விழிப்புணர்வு, தமிழர் வரலாறு உள்ளிட்ட பல்வேறு விசயங்கள் இந்த புத்தகத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த நிலையில் உள்ளாட்சித் தேர்தலுக்கான் வாக்கு எண்ணிக்கை இன்று (2020 ஜனவரி 2) நடைபெற்றது. இதில் செல்லம் கடம்பன் வெற்றி பெற்றுள்ளார்.