Skip to main content

ஏன் இந்த பெயரை வைக்கவில்லை ... அதிமுக அமைச்சரை கண்டுகொள்ளாத எடப்பாடி... மீண்டும் ஓபிஎஸ், இபிஎஸ் அணி?

Published on 06/03/2020 | Edited on 06/03/2020

முதல்வர் எடப்பாடிக்கு அதிமுக அமைச்சரவையில் இருக்கும் அமைச்சர் ஒருவரே கடிதம் எழுதியிருக்கும் சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது என்கின்றனர். இது பற்றி விசாரித்த போது, சென்னை அருகே உள்ள ஆவடி நகராட்சி கட்டிடத்துக்கு பெருந்தலைவர் காமராஜர் பெயர் ஏற்கனவே வைக்கப்பட்டிருந்தது. அந்த நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்திய அ.தி.மு.க அரசு, மாநகராட்சி கட்டிடத்துக்கு காமராஜர் பெயரை வைக்கவில்லை. 

 

admk


இது சம்பந்தமாக நாடார் அமைப்புகள் பலமுறை எடப்பாடிக்கு கோரிக்கை வைத்தும்  அவர் கண்டுக்கவில்லை என்று சொல்லப்படுகிறது. தற்போது அதே சமூகத்து அமைச்சரான மாஃபா பாண்டியராஜனிடம் அமைப்பினர் வலியுறுத்த, அவர் எடப்பாடிக்கு கடிதம் எழுதியிருக்கிறார் என்கின்றனர். மேலும் அதிமுகவில் ஓபிஎஸ் அணி, இபிஎஸ் அணி என்று இருந்த போது அமைச்சர் பாண்டியராஜன் ஓபிஎஸ் அணியில் இருந்தது குறிப்படத்தக்கது. அதே போல் தொடர்ந்து ஓபிஎஸ் ஆதரவாளர்கள் வைக்கும் கோரிக்கைகளை எடப்பாடி புறக்கணித்து வருவது அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது. எடப்பாடியின் செயலால் ஓபிஎஸ் தரப்பு அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்படுகிறது. 

 

சார்ந்த செய்திகள்