Skip to main content

ஓரிரு நாளில் புதிய நிர்வாகிகள் பட்டியல்: ஓ.பி.எஸ். பேட்டி

Published on 15/02/2018 | Edited on 15/02/2018
o panneerselvam



அதிமுக புதிய நிர்வாகிகள் பட்டியல் ஓரிரு நாளில் வெளியாகும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் அம்மா பேரவை ஆலோசனை கூட்டம் இன்று நடைப்பெற்றது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் பி.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அமைச்சர்கள், எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் ஆகியோர் பங்கேற்றனர். 

கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர்செல்வம், ஜெ. பிறந்தநாளன்று நலத்திட்டங்களை செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது என்று தெரிவித்தார். மேலும், அதிமுக புதிய நிர்வாகிகள் பட்டியல் ஓரிரு நாளில் வெளியாகும். அம்மா உணவகம் தொடர்ந்து நடத்தப்படும். இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது என்று கூறினார். 

சார்ந்த செய்திகள்

Next Story

இ.பி.எஸ், ஓ.பி.எஸ் இண்டெர்வியூ ஸ்டைல்..! அதிமுக அலுவலகத்தில் குவிந்த தொண்டர்கள். (படங்கள்)

Published on 24/09/2019 | Edited on 24/09/2019

 

நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய சட்டமன்றத் தொகுதிகளுக்கு அக்டோபர் 21ஆம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் விருப்பமனு அளிக்கலாம் என்று அதிமுக தலைமை அறிவித்திருந்தது. அதன்படி சிலர் விருப்ப மனு அளித்திருந்தனர். விருப்ப மனு அளித்தவர்களிடம் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் நேர்காணல் செய்தனர்.

Next Story

கடல் நீரைக் குடிநீராக மாற்றும் திட்டம்...அடிக்கல் நாட்டிய இ.பி.எஸ், ஓ.பி.எஸ் (படங்கள்)

Published on 27/06/2019 | Edited on 27/06/2019

இன்று(27.6.2019) காஞ்சிபுரம் மாவட்டம் நெம்மேலியில் ரூ.1259.38 கோடியில், நாளொன்றுக்கு 15கோடி லிட்டர் நீரை  சுத்திகரிக்கும் திறன் கொண்ட, கடல்நீரை குடிநீராக மாற்றும்  நிலையம் அமைக்கும் பணியை தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் அடிக்கல் நாட்டி துவங்கி வைத்தனர்.