




எதிர்க்கட்சித் தலைவரும் தி.மு.க தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் கடந்த 21.09.2020 தேதி, அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில், நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட, 'வேளாண் விளைபொருள் வர்த்தக மசோதா', 'விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோதா', 'அத்தியாவசியப் பொருட்கள் திருத்த மசோதா' ஆகியவற்றை திரும்பப்பெற வலியுறுத்தியும் - ஆதரவு தெரிவித்த அ.தி.மு.க அரசைக் கண்டித்தும், மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை 28.09.2020 (திங்கட்கிழமை) காலை 10.00 மணிக்கு நடத்துவதாகத் தீர்மானிக்கப்பட்டது. இதில் காங்கிரஸ், இடதுசாரிகள், ம.தி.மு.க, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகள் பங்கேற்கின்றன.
அதன்படி, இன்று காஞ்சிபுரம் – கீழம்பி கிராமத்தில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு தி.மு.க.வின் தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.