Skip to main content

முதலில் நல்ல மனு‌ஷனாக, நம்பகத்தன்மையாக நடந்து கொள்ள வேண்டும்: ஓ.பி.எஸ்.க்கு கே.சி.பழனிசாமி கண்டனம்

Published on 06/10/2018 | Edited on 06/10/2018


 

OPS

 

அரசியலில் யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் முதலில் நல்ல மனு‌ஷனாக, உண்மையாக, நம்பகத்தன்மை உள்ளவராக நடந்து கொள்ள வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வத்துக்கு முன்னாள் எம்.பி. கே.சி. பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். 

செய்தியாளர்களிடம் பேசிய அவர், 
 

அ.தி.மு.க.வில் சசிகலாவையும் அவரது குடும்பத்தையும் எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தர்மயுத்தம் நடத்தியபோது, அவருடன் முக்கிய தளகர்த்தாவாக விளங்கியவர்கள் கே.பி.முனுசாமி, மைத்ரேயன், பி.எச்.பாண்டியன், பொன்னையன், நத்தம் விசுவநாதன் மற்றும் நானும் ஒருவன். 
 

டி.டி.வி. தினகரன் அவரது ஆதரவாளர்களிடம் சொல்லி விட்டு தான் சந்திக்க வந்துள்ளார். ஆனால் எங்கள் யாரிடமும் தகவல் சொல்லாமல் ரகசியமாக சென்று டி.டி.வி. தினகரனை ஓ.பன்னீர் செல்வம் பார்த்திருக்கிறார் என்றால் இவர் பின்னால் நின்ற எங்களையும் அ.தி.மு.க. தொண்டர்களையும் முட்டாள் ஆக்கி விட்டார். இவர் ஏன் ரகசியமாக சென்று சந்திக்க வேண்டும். 
 

அரசியலில் யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் முதலில் நல்ல மனு‌ஷனாக, உண்மையாக, நம்பகத்தன்மை உள்ளவராக நடந்து கொள்ள வேண்டும்.

 

K. C. Palanisamy


தினகரனை சந்தித்து பேசிய போது என்னென்ன பேசினார்கள் என்ற விவரத்தை முழுமையாக சொல்லவில்லை. கோட்டூர்புரத்தில் யாருடைய வீட்டில் இந்த சந்திப்பு நடந்தது? சந்திப்புக்கு ஏற்பாடு செய்தது இவருக்கும் நண்பர். அவருக்கும் நண்பர் என்கிறார்கள். அப்படியானால் அவர் தொழில் அதிபரா? அரசியல்வாதியா? அவரைப் பற்றிய விவரங்களை ஏன் சொல்ல மறுக்கிறார்கள். கடந்த வாரம் தினகரனை மீண்டும் சந்திக்க முயற்சி செய்தார் என்ற குற்றச்சாட்டுக்கும் அவரிடம் இருந்து பதில் இல்லை.
 

அ.தி.மு.க.வில் ஓ.பன்னீர் செல்வம் - டி.டி.வி. தினகரன் என்ற அளவில் அரசியல் களத்தை அமைப்பதற்காக இவர்கள் இருவரும் சேர்ந்து கொண்டு நாடகமாடி கொண்டிருக்கிறார்கள் என கூறினார்.
 

 

 

 

சார்ந்த செய்திகள்