Skip to main content

பாஜக vs அதிமுக; ‘எல்லாம் எங்களுக்கு தெரியும்’ - மீண்டும் லைம்லைட்டுக்கு வந்த பொன்னையன் 

Published on 04/02/2023 | Edited on 04/02/2023

 

admk ponnayan talk about bjp

 

பாஜக விவகாரத்தில் எச்சரிக்கையுடன் உள்ளதாக பழனிசாமி தரப்பைச் சேர்ந்த அதிமுக முன்னாள் அமைச்சர் பொன்னையன் தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 27ம் தேதி நடைபெற உள்ள நிலையில், தமிழ்நாடு அரசியல் கட்சிகள் பல்வேறு வியூகங்களை வகுத்து வருகின்றன.

 

இந்த நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி தரப்பில் தென்னரசு போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதேபோன்று ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் செந்தில் முருகன் போட்டியிடுவதாக அறிவித்திருந்தார். மேலும் பாஜக அந்த தொகுதியில் போட்டியிட்டால் தங்களது வேட்பாளரை வாபஸ் வாங்குவதாகவும் அறிவித்திருந்தார் ஓபிஎஸ். இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இரண்டு தரப்பினரும் தனித்தனியாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையை சந்தித்து ஆறுதல் கோரியிருந்தனர்.

 

இதனிடையே அண்மையில் டெல்லி சென்று திரும்பிய அண்ணாமலை நேற்று காலை எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்துப் பேசினார். இது குறித்து அதிமுக முன்னாள் அமைச்சரும் மூத்த நிர்வாகியுமான பொன்னையன் செய்தியாளர் சந்திப்பின் போது, “வடநாட்டில் பாஜக என்னென்ன செய்தது என்பதை அறிந்துள்ளோம், பாஜக விவகாரத்தில் எச்சரிக்கையுடன் உள்ளோம்” என மைண்ட் வாய்ஸ் என்று நினைத்துக்கொண்டு பேசிவிட்டார்.

 

இதற்கு முன்பு, “தொண்டர்கள் எல்லாம் ரெட்ட இலை பின்னால தான் இருக்காங்க, தலைவர்கள் பணத்து பக்கம்  நிக்குறாங்க... கே.பி. முனுசாமி நக்சலைட்டா இருந்தார். நம்ம ஆளுங்க பூரா கோடி கோடியா கொள்ளை அடிச்சதும் ஸ்டாலின் ஈட்டியில குத்துவாருன்னு அமைதியா இருக்காங்கன்னு” அதிமுக நிர்வாகி கோலப்பனுடன் தொலைபேசியில பேசுன ஆடியோ சோசியல் மீடியால ட்ரண்ட் ஆச்சு., அதன்பிறகு ரொம்ப நாளுக்கு அப்புறம் இப்போதான் பொன்னையன் லைம்லைட்ல வந்திருக்காரு. ட்விட்டர்ல போஸ்ட் போட்டு இருந்தாலாவது என்னோட அட்மின்தான் ட்வீட் பண்ணதுன்னு சமாளிச்சி இருக்கலாம். ப்ரஸ் மீட்ல கொடுத்ததை எப்படி சமாளிக்குறாருன்னு பொறுத்திருந்து பாப்போம் என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.

 

 

 

 

சார்ந்த செய்திகள்