Skip to main content

3வது அணி அமைந்தால் அது பா.ஜ.க.வின் ‘பி’ அணியாக தான் இருக்கும்: கே.பாலகிருஷ்ணன்

Published on 02/05/2018 | Edited on 02/05/2018
k.balakrishnan cpim


குமரி மாவட்டம் குழித்துறையில் நேற்று மா.கம்யூனிஸ்ட் சார்பில் நடந்த மே தினம் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள நாகா்கோவில் வந்தார் மா.கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன். அப்போது அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.

 

கேள்வி: கர்நாடகாவில் பா.ஜ.க வெற்றி பெறுவது உறுதி. வெற்றி பெற்ற உடனே காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் என பொன்ராதாகிருஷ்ணன் கூறியிருக்கிறாரே?
 

பதில்: பா.ஜ.க வெற்றி பெறும் என்று அவர்கள் நம்புகிறார்கள் என்றால் காவிரி லோண்மை வாரியத்தை உடனே அமைக்க தானே வேண்டும் ஏன் இழுத்தடித்து கொண்டிருக்கிறர்கள்.
 

கேள்வி: தெலுங்கான முதல்வர் சந்திரசேகர ராவ் - கலைஞர் சந்திப்பு பற்றி...
 

பதில்: மாநிலங்களுக்கு அதிக அதிகாரங்கள் பெறுவது பற்றி பேசியதாக ஸ்டாலின் கூறியிருக்கிறார். அது கூட்டணி பேச்சுவார்த்தைக்கான சந்திப்பா? என்பது பற்றி நான் இப்போது சொல்லுவதற்கு எதுவும் இல்லை.
 

கேள்வி: மூன்றாவது அணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?
 

பதில்: மூன்றாவது அணி அமைந்தால் அது பா.ஜ.க வின் ‘பி’ அணியாக தான் இருக்கும்.
 

கேள்வி: ஹெச்.ராஜா, எஸ்.வி. சேகர் இருவரும் சர்ச்சைக்குரிய பேச்சுகள் பேசி வருவது பற்றி…?
 

பதில்: தமிழகத்தில் ராஜா என்னவும் பேசலாம். எதுவும் பேசாலாம் ஆனால் அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டார்கள். எஸ்.வி. சேகரின் முன் ஜாமினை கோர்ட் மறுத்த போதும் அவர் கைது செய்யபடவில்லை. இதற்கு காரணம் அவருக்கு வேண்டியவர் உயர் பதவியில் இருப்பதால் தான். இந்த திராணியற்ற ஆட்சி குறித்து வேற என்ன சொல்ல முடியும். இவ்வாறு கூறினார். 

சார்ந்த செய்திகள்