Skip to main content

பேராசிரியர் அன்பழகன் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய கமல்ஹாசன்..! (படங்கள்)

Published on 07/03/2020 | Edited on 07/03/2020

 

சளி, மூச்சுத் திணறல் காரணமாகக் கடந்த 24-ம் தேதி அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அன்பழகனுக்கு தொடர் சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. இந்தச் சூழலில் இன்று அதிகாலை 1 மணி அளவில் அவர் காலமானார். இந்தச் செய்தி திமுகவினரைச் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. கீழ்ப்பாக்கத்தில் உள்ள வீட்டில் வைக்கப்பட்டுள்ள அன்பழகனின் உடலுக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் பிரபலங்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்தவகையில் நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் பேராசிரியர் க.அன்பழகன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். 

 

 

 

சார்ந்த செய்திகள்