Published on 29/08/2018 | Edited on 29/08/2018

அண்ணா திராவிடர் கழகம் என்ற பெயரில் சசிகலா தம்பி திவாகரன் சமீபத்தில் புதிய கட்சியை தொடங்கினார். அக்கட்சியின் மாநில அமைப்பு செயலாளர் கோவிந்தராஜ் திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர், தமிழகம் முழுவதும் உறுப்பினர்கள் சேர்க்கை நடந்து வருகிறது. தமிழகம் முழுவதும் 17 லட்சம் உறுப்பினர்கள் உள்ளனர். மதுரை, திருச்சி, மன்னார்குடியில் கட்சியின் கொள்கை விளக்க மாநாடு நடக்க உள்ளது.
டிடிவி தினகரன் இரட்டை இலையை ஒழிக்க முயற்சிக்கிறார். இரட்டை இலைக்கு எதிராக அண்ணா திராவிடர் கழகம் செயல்படாது. அதிமுகவுடன் கட்சியை ஒருங்கிணைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது மக்களவை தேர்தலில் பிரதிபலிக்கும் என்றார்.