Skip to main content

“அவர்கள் தலையில் இடி விழுந்தது போல் உள்ளது” - எடப்பாடி பழனிசாமி வேதனை

Published on 23/12/2022 | Edited on 23/12/2022

 

"It's like a thunderbolt has fallen on their heads," Edappadi Palaniswami said

 

பொங்கல் பண்டிகைக்கு அரசு சார்பில் கொடுக்கப்படும் பொங்கல் தொகுப்புடன் முழு கரும்பையும் வழங்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “2023 ஆம் ஆண்டு பொங்கலுக்கு அரசு குடும்ப அட்டைதாரர்களுக்கு கரும்பு வழங்கும் என விவசாயிகள் கரும்பை சாகுபடி செய்து வைத்துள்ளனர். ஆனால், 1000 ரூபாய் ரொக்கமும் 1 கிலோ சர்க்கரையும், ஒரு கிலோ பச்சரிசியும் வழங்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது. 

 

அரசின் அறிவிப்பில் கரும்பு இடம்பெறாதது விவசாயிகளின் தலையில் இடி விழுந்தது போல் உள்ளது. விவசாயிகளும் பொங்கல் தொகுப்பில் கரும்பைச் சேர்க்க வலியுறுத்தியுள்ளனர். 

 

வரும் தைப்பொங்கலுக்கு அரசு ரூபாய் 5000 ரொக்கப்பணத்துடன் முழு செங்கரும்பையும் 2 கோடியே 19 லட்சம் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்க வேண்டும்” எனக் கூறியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்