Skip to main content

வெள்ளக்கோவில் சாமிநாதன் விலகியதன் பின்னணி!

Published on 18/06/2019 | Edited on 18/06/2019

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் திமுக மாபெரும் வெற்றியை பெற்றது.இந்த வெற்றிக்கு திமுகவின் பிரச்சார யுக்தியும் ஒரு காரணமாக சொல்லப்பட்டது. திமுகவிற்காக ஸ்டாலின் மகன் உதயநிதி தமிழ்நாடு முழுவதும் பிரச்சாரம் மேற்கொண்டார்.அவரது பிரச்சாரம் அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்ததாக இருந்தது. இந்த நிலையில் திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் தலைமைக்கு ஒரு வேண்டுகோள் விடுத்தனர்.அதில் உதயநிதி ஸ்டாலினுக்கு திமுக இளைஞரணி தலைவர் பதவி கொடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.
 

dmk




இதனையடுத்து திருச்சி திமுக பொதுக் கூட்டத்தில் ஸ்டாலின் முன்னிலையில் பேசிய உதயநிதி எந்தப் பொறுப்பையும், பதவியையும் எதிர்பார்க்கவில்லை, அதற்காக நான் பிரச்சாரம் செய்யவும் இல்லை. கட்சி வெற்றிக்காக மட்டுமே பிரச்சாரம் செய்தேன் என்று கூறினார். இருந்தாலும் திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உதயநிதிக்கு இளைஞரணி பதவி கொடுக்க வேண்டும் என்று கூறிவருவதால் திமுக இளைஞரணி தலைவராக இருந்த வெள்ளக்கோவில் சாமிநாதன் தனது ராஜினாமா கடிதத்தை திமுக தலைமைக்கு கொடுத்துள்ளார. இதனால் வெகு விரைவில் திமுக இளைஞரணி பொறுப்பை உதயநிதி ஸ்டாலின் ஏற்பார் என்று திமுக வட்டாரங்கள் கூறிவருகின்றனர்.மேலும் வெள்ளக்கோவில் சாமிநாதனுக்கு மேல்சபை எம்.பி பதவி கொடுக்கப்படும் என்றும் திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

சார்ந்த செய்திகள்