இந்தியாவில் மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடைப்பெறுகிறது. இதில் முதற்கட்ட தேர்தல் நிறைவடைந்த நிலையில் , இரண்டாம் கட்ட தேர்தல் நாளை (18/04/2019) தமிழகம் மற்றும் புதுவை உட்பட 13 மாநிலங்களில் 97 மக்களவை தொகுதிகளில் தேர்தல் நடைப்பெற உள்ளது. இந்நிலையில் வேலூர் மாவட்டத்தில் நடந்த வருமான வரித்துறை சோதனையில் கணக்கில் வராத சுமார் 11 கோடி பணத்தை கைப்பற்றியதால் மேதகு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் வேலூர் மக்களவை தொகுதி தேர்தல் ரத்து செய்ய உத்தரவிட்டுள்ளார். அதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் நேற்று இரவு முதல் தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் வருமான வரித்துறையினர் தீவிர சோதனையில் ஈடுப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் நேற்று இரவு தேனி மக்களவை தொகுதிக்கு உட்பட்ட ஆண்டிப்பட்டியில் அமமுக அலுவலகத்தில் விரைந்த தேர்தல் பறக்கும் படையினரை அமமுக கட்சியினர் தடுத்ததாகவும் , தற்காப்புக்காக போலீஸார் வானத்தை நோக்கி நான்கு முறை துப்பாக்கிச்சூடு நடத்தியதாகவும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தள்ளனர். பின்பு ராணுவ பாதுகாப்பு படையினர் உதவியுடன் அமமுக அலுவலகத்தில் உள்ளே நுழைந்து வருமான வரித்துறையினர் விடிய விடிய சோதனையில் ஈடுப்பட்டனர். அதில் சுமார் 1 கோடி ரூபாய்க்கு மேல் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்து அதிகாரிகளை சோதனையிட தடுத்ததாக கூறி சுமார் 50 க்கும் மேற்பட்ட அமமுகவினர் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. இந்நிலையில் தேனி மக்களவை தொகுதி தேர்தல் ரத்தாகலாம் எனவும் , ஆண்டிப்பட்டி சட்டமன்ற இடைத்தேர்தல் ரத்தாகவும் அதிக வாய்ப்பு உள்ளது. இது போன்ற தமிழகத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து பணம் பறிமுதல் இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது .
இத்தகைய நிகழ்வுகளை இந்தியாவே உற்று நோக்கி வருகிறது. மேலும் இந்திய தேர்தல் ஆணையர்கள் டெல்லியில் இருந்து தமிழகத்தை கண்காணித்து வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக தலைமை தேர்தல் ஆணையர்கள் தமிழகத்தில் வர அதிக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இது குறித்து எதிர்கட்சியினர் வேட்பாளர்கள் மீது மட்டுமே வருமான வரித்துறையினர் சோதனை நடைப்பெற்று வருவது தமிழக மக்கள் மற்றும் இந்தியாவில் உள்ள அரசியல் கட்சியினரிடையே அதிர்ச்சியடைய செய்தது. தமிழகத்தில் ஆளுங்கட்சியினர் பணம் பட்டுவாடா செய்வதாக புகார் அளித்தாலும் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவில்லை என எதிர்கட்சிகள் புகார் தெரிவித்துள்ளனர். இதற்கு காரணம் என்னவென்றால் தமிழகத்தில் மக்களவை தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக மற்றும் திமுக நட்சத்திர வேட்பாளர்களே அதிகம் என்பதால் இந்தியாவிலேயே தமிழகத்தில் அதிகம் பணப்பட்டுவாடா மற்றும் துப்பாக்கிச்சூடு நடைப்பெற்றுள்ளது என்பது குறிப்பிடடத்தக்கது. தமிழகத்தில் நேர்மையான முறையில் தேர்தல் நடத்த இந்திய தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசியல் கட்சியினர் , பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனால் தமிழகத்தில் மக்களவை தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் நாளை நடைப்பெறுமா? என்பது சந்தேகமாக உள்ளது .